விக்கிரவாண்டி: சிறுமிக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு.. கைதான மூவருக்கு ஜாமின்

விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று வயது சிறுமி, பள்ளி கழிவு நீர் தொட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் கைதான மூவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 

Jan 10, 2025 - 15:33
 0
விக்கிரவாண்டி: சிறுமிக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு.. கைதான மூவருக்கு ஜாமின்
கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுமிக்கு பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் ஐந்து லட்சம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று வயது சிறுமி, பள்ளி கழிவு நீர் தொட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் கைதான மூவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த பழனிவேல் - சிவசங்கரி தம்பதியின் மூன்று வயது மகள் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் எல்.கே.ஜி.படித்து வந்தார். கடந்த 3-ஆம் தேதி அச்சிறுமி ஆசிரியரிடம் கூறி விட்டு கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, பள்ளியில் உள்ள கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் படிக்க: பொங்கல் தொகுப்போடு இரண்டாயிரம் வழங்க கோரிக்கை.. பாஜக மனுவை நிராகரித்த நீதிமன்றம்

தனது குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி அச்சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதன் அடிப்படையில் சந்தேக மரணம், பணியில் அஜாக்கிரதையாக இருப்பது ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமின் கோரி மூவரும் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் விழுப்புரத்தில் பெய்த கனமழையின் காரணமாக கழிவு நீர் தொட்டி பராமரிக்கப்படாமல் இருந்ததாகவும், குழந்தை வழி தவறி சென்றதன் காரணமாக இந்த நிகழ்வு நடந்ததாக தெரிவிக்கபட்டது.

மேலும், வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமின் வழங்க கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கபட்டது. இதையடுத்து, பள்ளியின் தாளாளர், முதல்வர், வகுப்பு ஆசிரியர் ஆகிய மூவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிபதி, மூவரும் சென்னையில் ஒரு வாரம் தங்கி இருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டார். தொடர்ந்து, பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow