தந்தை பெரியாரை கொச்சைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - திருமாவளவன்

எங்களை ஜாதியை பாகுபாடு காட்டி ஓரங்கட்டப்பட்டாலும், ஒதுக்கி வைத்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் தான் மைய புள்ளி என்றும், தந்தை பெரியாரை கொச்சைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Jan 10, 2025 - 18:07
 0
தந்தை பெரியாரை கொச்சைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - திருமாவளவன்
தந்தை பெரியாரை கொச்சைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - திருமாவளவன்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க, ஹிந்துஸ்தான் ஜிங் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, மேலூர் கர்னல் பென்னிகுவிக் பேருந்து நிலையம் முன்பு "விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்ட கூட்டம் நடைப்பெற்றது. 

இதில், சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். மேலூர் பகுதிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராகவும்,  இத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். என வலியுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது, மேலூர் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய திருமாவளவன், அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக, அப்பகுதி மக்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழமே எதிர்த்து வருகின்றது. இத்திட்டம் 100 சதவீதம் வரவே வராது. இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்பதே விருப்பம். தமிழக அரசு அனுமதி தராமல், இத்திட்டத்தை மத்திய அரசோ, வேதாந்தா நிறுவனமோ கொண்டுவர முடியாது. கனிமம் எடுக்கும் உரிமையை மாற்றி அமைத்த மத்திய அரசு திட்டம் கண்டிக்க தக்கது. இத்திட்டத்தை திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்த்ததால், வேறு வழியில்லாமல் அதிமுகாவும் எதிர்த்து உள்ளது. தற்போது, தமிழக பாஜகவும் எதிர்த்து வருகின்றது.

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங் என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கினாலும், மாநில அரசு அனுமதி இன்றி சுரங்கம் அமைக்க முடியாது. ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உணர வேண்டும். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்த போது, மாநில அரசு அனுமதி இன்றி இத்திட்டம் கண்டிப்பாக வராது என்று தெரிவித்தார். மேலும் இத்திட்டம் மூலம் வரும் வருவாய் அனைத்தும் மாநில அரசுக்கு தான் வரும் என்று தெரிவித்தார். 

நாட்டில் 33 சதவீதம் கண்டிப்பாக வன பகுதியாக இருக்க வேண்டும். வனத்தை பாதுகாப்பது மூலம் மனிதர்களுக்கு மறைமுகமாக நன்மை கிடைத்து வருகின்றது. உணவு சங்கிலி மூலம் வளம் கிடைத்து சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட்டு  வருகின்றது. அதனால், தமிழகத்தின் முதல் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர் தளமான அரிட்டாபட்டி பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் எழுத்துக்கள் உள்ள நிலையில் இப்பகுதிகளை பாதுகாக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தான் மத்திய அரசு தமிழுக்கு செம்மொழி என்று அறிவித்துள்ளது. நமது முன்னோர்கள், நாம் அறிந்துக் கொள்வதற்காக விட்டு சென்ற கல்வெட்டுகளை நம் சந்ததியினர் அறிந்துக் கொள்ள நாம் பாதுகாக்க வேண்டும்.

சிந்து சமவெளி பகுதியிலும் தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள். அப்போது சாதி கிடையாது. தமிழர்களின் பாரம்பரிய பெருமைகளை அழிக்க மத்திய அரசு முயன்று வருகின்றது. பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பகுதியை தவிர்த்து, மற்ற பகுதிகளில் இந்த திட்டம் கொண்டுவர மத்திய அரசு முயன்று வருகின்றது. 

அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல சமணர் படுக்கைகள் உள்ளன. இதன் மூலம், தமிழர்கள் வரலாற்று காக்கபட்டு வருகின்றது. குடவரை கோவில்கள் செதுக்கும் வல்லமை, ஆற்றல் பெற்றவர்கள் தமிழர்கள். உலகில் எந்தப் பகுதிக்கு சென்றாலும் சொந்த ஊரில் வந்த பிறகுதான் மனிதர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.அதுபோலத்தான் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும்.

ஆயிரம் கிலோ பாறை உடைக்கபட்டால், 1 கிலோ அளவிலான டங்ஸ்டன் கனிமம் தான் கிடைக்கும். டங்ஸ்டன் கனிமம் எடுக்க அதிகப்படியான நிலத்தடி நீர் தேவைப்படும். இதன் மூலம் கிடைக்கும் கழிவுகள் அனைத்தும் இந்த மண்ணில் தான் கொட்டப்படும். இதனால்  காற்று, நீர், மண் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.

இத்திட்டம் மூலம், வேதாந்தா நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும், மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி கிடைக்கும், மாநில அரசும் பயன் பெரும். ஆனால் ஒருதிட்டம் வந்தால் அந்த பயணும் போய்விடும். டங்ஸ்டன் எடுப்பதால் நாடு ஒன்றும் மிகப்பெரிய வல்லரசாக மாறி விடுமா. அப்படி ஏற்படும் வல்லரசு தேவை இல்லை. நாம் வாழும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. நானும் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவன் தான். மக்களின் போராட்டம் காரணமாக டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு இரண்டே இரண்டு கோரிக்கை தான். இப்பகுதியில் வழங்கப்பட்ட டங்ஸ்டன் கனிம திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மற்றும் தொல்லியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும். தமிழக அரசும் இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

இதற்காக இப்போது கூடியிருக்கின்ற, சிறுத்தைகள் கூட்டம் சாம்பிள் தான். 10 இலட்சம் பேரை கூட திரட்டி போராடுவோம் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம்.  பிள்ளையார் சிலையை உடைத்த பெரியார் 90 வயது வரை இருந்துள்ளார். சாதி, மதம் இல்லாத பகுதியாக மேலூர் பகுதி இருந்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ள திமுக கூட்டணி தான் மீண்டும் வெற்றிப் பெறும். எவ்வளவு ஆசைகள் காட்டி திருமாவளவினை வெளியே இழக்க பாஜக முயன்றது. தமிழகத்தில் தனியாக நின்று ஓட்டு வாங்காமல் இருக்கலாம் ஆனால் தமிழகம் எங்களை ஏற்று உள்ளது. ஜாதியை பாகுபாடு காட்டி எங்களை ஓரம் கட்ட சிலர் நினைக்கின்றனர். எங்களை ஓரங்கட்டப்பட்டாலும் ஒதுக்கி வைத்தாலும் நாங்கள் தான் மைய புள்ளி. சனாதான சக்திகள் தமிழகத்தில் வேரூன்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். 

பெரியாரும்,  அம்பேத்கரும் இந்தியாவின் சமூக நீதி அடையாளமாக இருக்கின்றார்கள். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்த மாமனிதர்கள் தான் நமக்கான அடையாளம். திருமாவளவன் நாடாளுமன்றத்தில் முழங்குவதற்கு சமூக கோட்பாடு தான் முக்கியம். சமூக நீதி  கோட்பாட்டின் தேசிய அடையாளமாக  இருப்பவர்கள் தான் பெரியாரும் அம்பேத்காரும் என்று கூறினார்.

 சகோதரர் சீமான் போன்றவர்கள் ஏதோ குதர்க வாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர் பேசுகின்ற அரசியலுக்கு அவருக்கு உரிமை இருக்கின்றது. ஒரு தேசத்தின் சமூக நீதி என் அடையாளமாக இருக்கின்ற, கால் நூற்றாண்டு காலமாக தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கின்ற ஆளுமையாக உள்ள தந்தை பெரியாரை கோச்சைபடுத்துகின்றதை விடுதலை சிறுத்தைகள் ஒருபோதும் ஏற்க மாட்டோம், அனுமதிக்க மாட்டோம். பெரியார் திக, திமுக, அதிமுக விற்கு மட்டுமே உரிமையானவர் இல்லை. பெரியார் அனைத்து தரப்பு விளிம்பு நிலை மக்களுக்கு உரிமையானவர். 

பெரியார்.தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்த தேசத்திற்கு உரிமையானவர். இந்த 35 ஆண்டு சாதனைகளில் அனைத்து தரப்பு மக்களிடம் பெரியாரையும், அம்பேத்கார்  கொண்டுபோய் சேர்த்திருக்கிறேன். பெரியாரை கொச்சைப்படுத்துவதை இந்த நாடு ஒருபோதும் அனுமதிக்காது. 

சீமானின் பேச்சை அண்ணாமலை ஆதரிப்பதாக சொன்னார்கள், அதை அண்ணாமலையால் மட்டுமே ஆதரிக்க முடியும். அண்ணாமலை என்ன சமூக நீதிப் பாசறையில் வளர்ந்தவரா, சனாதான கொட்டடியில் வளர்ந்தவர். அது இல்லாமல் இருந்திருந்தால், மக்களை திரட்டி போராடாமல், சாட்டையால் தன்னை தானே அடித்து கொள்வாரா. அண்ணாமலை என்ன மனநிலையில் இருக்கிறார் என்றே தெரியவில்லை 

அரிட்டாபட்டி பகுதியில் கனிம திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அதேபோல் இதற்காக போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அப்போது திருமாவளவன் வலியுறுத்தி பேசினார்...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow