ஆளுநரை மத்திய அரசாங்கம் திரும்ப பெற வேண்டும் - CPM மாநில செயலாளர் பெ. சண்முகம்
மாநில அரசாங்கத்திற்கு இடப்புறமாக இருக்கக்கூடிய ஆளுநரை மத்திய அரசாங்கம் திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநில அரசாங்கத்திற்கு இடப்புறமாக இருக்கக்கூடிய ஆளுநரை மத்திய அரசாங்கம் திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் பெ. சண்முகம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம்,மற்றும் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
மாநில செயலாளர் சண்முகம் பேசியாதவது, மார்க்லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு ஜனவரி 3 லிருந்து 5 வரை நடைபெற்றது, மூன்று நாள் மாநாட்டில் மக்களை பாதிக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை குறித்து 25க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டது. இன்றைக்கு பாஜக அரசாங்கம் புதிதாக படித்த இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு இல்லை என்ற பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
யுஜிசி உத்தரவில், குறிப்பாக பல்கலைக்கழக துணை வேந்தர் நியமிப்பது மாநில அரசு உரிமை பாதிக்கும் வகையில் அறிவித்திருக்கிறார்கள், மாநில அரசாங்க சட்டத்தின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகத்தில் கூட இது மாதிரி துணைவேந்தர்களை நியமிக்க மாநிலத்திற்கு உரிமை இல்லாதவாறு இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்கள்
யூசிஜி வெளியிட்டிருக்கக்கூடிய இந்த நகலை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், இதைக் குறித்து மற்ற கட்சிகளோடு கலந்து பேசி ஒரு கூட்டு போராட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம்,
இதுபோன்று தொடர்ந்து மாநில அரசுக்கு குடைச்சல்களை கொடுத்துவரும் மத்திய அரசாக இருக்கிறது, ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும் மரபு இருக்கிறது தமிழ்நாடு சட்டமன்றத்தை பொறுத்த வரை தமிழ்த்தாய் வாழ்த்தை தொடக்கத்திலும் மகிழ்ச்சி நிறைவில் தேசிய கீதத்தை பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்,
சபாநாயகர் இது குறித்து ஆளுநருக்கு விளக்கமளித்தும் இதை ஒரு பிரச்சினையாக்கி வழி நடத்தி செய்துள்ளார். இந்த போக்கை ஆளுநர் மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசாங்கம் தொடர்ந்து மாநில அரசாங்கத்திற்கு இடப்புறமாக இருக்கக்கூடிய இந்த செயலில் ஈடுபடக்கூடிய ஆளுநரை மத்திய அரசாங்கம் திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்,
இந்த மாநிலத்தில் ஆளுகின்ற தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி சொல்லப்பட்ட பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்கள் வாக்குறுதிகளில் இல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறார்கள்.இன்னும் ஓராண்டு இருக்கக்கூடிய நிலையில் மீதி இருக்கக்கூடிய வாக்குறுதியை நிறைவேற்றுவதாக கூறியிருக்கிறார்கள், பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று கூறியிருக்கிறார்கள்.
இன்னும் இது போன்ற முக்கியமான வாக்குறுதிகளை மாநில அரசாங்கம் செயல்படுத்த முன் வர வேண்டும் என்று கோரிக்கையை நாங்கள் வைக்கிறோம், மக்கள் நலச் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது,
ஜனநாயக ரீதியாக போராடும் போராட்டத்தை காவல்துறை தடுக்கின்ற வகையில் நடந்து கொள்கிறது, ஜனநாயக ரீதியாக போராடும் போராட்டத்திற்கும் அனுமதி மறுக்கிறார்கள், இது போன்ற போராட்டங்கள் நடத்தும் பொழுது வழக்கு போடுவது என்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் போராடுகின்ற உரிமையை இந்திய சாசன சட்டத்தில் மக்களுக்காக வைத்திருக்கிறார்கள், போராட்டத்தை தடுப்பது இத்தகைய அடுக்க முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது,
75 ஆண்டுகளாகவே புதுமனை பட்டா பிரச்சனை தமிழகத்தில் நிலவே வருகிறது இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வை தமிழக அரசு செய்து தர வேண்டும், அனைத்து மக்களுக்கும் ஒரு சொந்த வீடு வழங்குவது என்பது அரசாங்கத்தின் நடைமுறை சாத்தியம்தான், குடிமனை பட்டாக்கும், குடியுரிமை பட்டாக்கும் ஒரு நிரந்தர தீர்வு தமிழக அரசு தர வேண்டும்.
பட்டியல் ஜாதி மக்களுக்கு பஞ்சமி நிலம் அளிப்பதை சட்டத்துக்கு விரோதமாக மற்றொரு மக்களுக்கு வைக்கப்பட்டுள்ளது, ஆகவே இந்த நிலங்களை பட்டியல் என மக்களுக்கு நிலத்தை திரும்ப பெற்று தர வேண்டும், இல்லை என்று சொன்னால் இது எதிர்த்து மார்க்சிட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்த்து போராடுவோம் என்ற தீர்மானத்தை மாநாடில் எடுத்து உள்ளோம்,
எப்பொழுதுமே மாநில அரசு மக்களுக்கு எதிராக செயல்படும் பொழுது அதை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம், தொழிற்சங்கம் அமைத்துக் கொள்வது பதிவு செய்வதற்கு குறித்து சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக போராடி தான் பெற்று தந்தோம்,
கடந்த மூன்று ஆண்டு காலமாக இது எல்லாம் மக்களுக்கு எதிராக இருந்ததோ அதற்காக குரல் கொடுத்து போராடுவதே எங்களின் கொள்கை அதில் சமரசத்திற்கு இடமில்லை, அதே நேரத்தில் மக்களுக்கு உபயோகப்படுகின்ற சட்டங்களும் கொண்டு வரும்பொழுது அதற்கு நாங்கள் வரவேற்பேன் அளிக்கிறோம்,
மத்திய பிஜேபி அரசு மாநில உரிமையை பறிக்கும் பொழுதும் மாநில திட்டங்களுக்கு எதிராக செயல்படும் போது நிச்சயமாக அதற்கும் நாங்கள் குரல் கொடுப்போம், அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என்பதுதான் நாங்கள் சுட்டி காட்டினோம், ஏனென்றால் போராட்டத்திற்கு ஊர்வலத்திற்கும் அனுமதி கொடுக்கவில்லை என்ற ஒரு காரணத்திற்காக நாங்கள் கூறவில்லை, தொடர்ச்சியாகவே விவசாயிகளுக்கு மக்களுக்கு ஓரளவிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதனால் தான் அதை குறிப்பிட்டுச் கூறினோம்,
திமுக அரசை கண்டித்ததற்காக செயலாளரை மாற்றினார்கள் என்பது உண்மை அல்ல, மதவாதத்தை கடைபிடித்து பாஜக அரசு தமிழகத்தில் வராமல் இருக்க தொடர்ந்து இந்தியா கூட்டணியில் உள்ளோம், ஒன்றிய அரசாங்கம் தாங்களாலும் மாநிலங்களுக்கு மட்டும் அனைத்து சலுகைகளும் வழங்கி மற்ற மாநிலங்களுக்கு பாரபட்சம் காண்பிக்கிறது,மக்களுக்காகவே நாங்கள் திமுக கூட்டணியில் தொடர்கிறோம்,
சாம்சங் விவகாரத்தில் திமுகவின் அணுகுமுறையை கொஞ்சம் கூட நாங்கள் ஏற்கவில்லை என்று கூறிய அவர், ஈரோடு தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் யார் போட்டியிட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவிக்கும்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்கள் சுயநலவாதிகள் என்று ஆர்.ராசா சொல்வது மிக மிக தவறானது, அடிப்படையற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.
What's Your Reaction?