அக்காவுடன் திருமண நிச்சயம்.. தங்கையை கடத்தி பலாத்காரம் செய்த ரவுடி கைது..

Rowdy Arrest in Chennai : இருசக்கர வாகனத்தில் வரும் நபர் சிறுமியை அழைத்து செல்லும் காட்சிகள், சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

Jul 17, 2024 - 02:51
Jul 18, 2024 - 16:13
 0
அக்காவுடன் திருமண நிச்சயம்.. தங்கையை கடத்தி பலாத்காரம் செய்த ரவுடி கைது..
பாலியல் பலாத்கார வழக்கில் ரவுடி கைது

அக்காவை திருமணம் செய்ய நிச்சயம் செய்து விட்டு அவரது 13 வயது தங்கையை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த ரவுடியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

Rowdy Arrest in Chennai : சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு 3 மகள்களும்,‌ 3 மகன்களும் உள்ளனர். இவரது 13 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 12 ஆம்‌ தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் உடனே பள்ளிக்கு சென்று விசாரித்த போது சிறுமி பள்ளிக்கு வரவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனே செய்வதறியாது திகைத்து நின்ற சிறுமியின் தாய் சிறுமியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி அலைந்தபோது, தனது மற்றொரு மகளுக்கு நிச்சயம் செய்த மணிகண்டனின் வீட்டில் சிறுமி இருப்பது தெரிய வந்தது. உடனே சிறுமியின் தாயார் அங்கு சென்று கேட்டபோது சிறுமியை வீட்டிற்கு அழைத்து வருவதாக, மணிகண்டன் கூறியதை கேட்டு தாய் வீட்டிற்கு சென்றார்.

ஆனால் அவர்கள் கூறியது போல் சிறுமியை வீட்டிற்கு அழைத்து வராததால் சந்தேகமடைந்து அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் சிறுமியின் தாய் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், இது குறித்து நேற்று ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீஸார் காணாமல் போன சிறுமியின் செல்போன் எண்ணை வைத்தும் அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் வரும் நபர் ஒருவர் சிறுமியை அழைத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்ததை அடுத்து போலீஸார் சிறுமியை தேடிவந்தனர்.

இதற்கிடையே காணமல் போன சிறுமி, தானாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.‌ அவரிடம் நடத்திய விசாரணையில், அக்காவை திருமணம் செய்ய நிச்சயம் செய்த, சரித்திர பதிவேடு குற்றவாளியும் ரவுடியுமான மணிகண்டன் என்பவர், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

மேலும், சரித்திர பதிவேடு குற்றவாளியான மணிகண்டன் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போலீஸார் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வண்புணர்வு செய்த ரவுடி மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow