இந்திய சந்தையில் களமிறங்கும் ரியல்மி 13 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட் போன்... கண்களைக் கவரும் மூன்று வண்ணங்களில்!
ரியல்மி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ரியல்மி 13 ப்ரோ+ 5ஜி மொபைல் போன்களை இன்னும் 2 நாட்களில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.

சீன மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி தனது புதிய தயாரிப்பான ரியல்மி 13 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட் போனை இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் அம்சங்கள், விலை மற்றும் ஆஃபர்கள் குறித்து கீழே பார்க்கலாம்.
ரியல்மி 13 ப்ரோ+ 5ஜி விலை:
அடுத்த மாதம் 2ம் தேதி இந்திய சந்தைகளில் அறிமுகமாக இருக்கும் புதிய ரியல்மி 13 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட் போன் மொத்தம் 3 வண்ணங்களில் கிடைக்கிறது. எமரால்டு கிரீன், மோனட் கோல்டு மற்றும் மோனட் பர்பிள் ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது.
ரியல்மி 13 ப்ரோ+ 5ஜி (8GB + 256GB) வேடியண்ட் மொபைல் போனின் விலை ரூ. 32,999 ஆகவும் ரியல்மி 13 ப்ரோ+ 5ஜி (12GB + 256GB) வேடியண்ட் மொபைல் போனின் விலை ரூ. 34,999 ஆகவும் மற்றும் ரியல்மி 13 ப்ரோ+ 5ஜி (2GB + 512GB) வேரியண்ட் மொபைல் போனின் விலை ரூ. 36,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
ரியல்மி 13 ப்ரோ+ 5ஜி சிறப்பு சலுகைகள்:
இந்த புதிய மொபைல் போன் அறிமுக செய்தியாளர் சந்திப்பில் ரியல்மி நிறுவனம் அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், “செப்டம்பர் 2ம் தேதி ரியல்மி 13 ப்ரோ+ 5ஜி மாடல் போன்கள் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. செப்டம்பர் 2ம் தேதி மதியம் முதல் நள்ளிரவுக்குள் மோனட் பர்பிள் நிற போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 4000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும், ரூ. 3000 வங்கி ஆஃபரும் வழங்கப்படும். வங்கி ஆஃபர் மோனட் பர்பிள் நிற போனை வாங்கும் நபர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
இதே போல் செப்டம்பர் 2ம் தேதி மோனட் கோல்டு மற்றும் எமரால்டு கிரீன் நிற போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 4000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கொடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி 13 ப்ரோ+ 5ஜி அம்சங்கள்:
இந்த புதிய ரியல்மி 13 ப்ரோ+ 5ஜி 6.7 இன்ச் 120Hz முழு HD மற்றும் AMOLED திரையுடன் வருகிறது. பின்னால் உள்ள மூன்று கேமராக்களும் 50 மெகா பிக்ஸல் டெலிபோட்டோ ஷூட்டர், 8 மெகா பிக்ஸல் சென்சார் மற்றும் Ultrawide lens ஆகிய அம்சங்களைப் பெற்றுள்ளது. மேலும் முன் கேமரா 32 மெகா பிக்ஸல் சென்சாருடன் வருகிறது. இதன் மூலம் நீங்கள் துல்லியமான செல்ஃபிக்களை எடுக்கலாம்.
மேலும் படிக்க: ஜூனியர் மேஸ்ட்ரோ.. கிங் ஆஃப் BGM... யுவனின் சம்பளம், சொத்து மதிப்பு தெரியுமா?
Snapdragon 7s Gen 2 SoC கொண்டுள்ள இதில், Realme 13 Pro+ 5G சிப் அடங்கியுள்ளது. மற்றும் 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட 5,200mAh பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






