கன்பார்ம் டிக்கெட் இருந்தால் தான் இனி ரயில் நிலையத்திற்குள் அனுமதி: ரயில்வே துறை அதிரடி!

பல ரயில் நிலையங்களில், நுழைவு பாதையினை தவிர்த்து சில குறுக்கு வழிகளிலும் ரயில் நிலையத்திற்குள் பயணிகள் வருகைத் தருகின்றனர். இதனை முறையாக கண்டறிந்து அனைத்து குறுக்குப்பாதைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mar 8, 2025 - 12:58
Mar 8, 2025 - 14:53
 0
கன்பார்ம் டிக்கெட் இருந்தால் தான் இனி ரயில் நிலையத்திற்குள் அனுமதி: ரயில்வே துறை அதிரடி!
Railway ticket

அதிக பயணிகள் வருகைத்தரும் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, இனி கன்பார்ம் டிக்கெட் இருந்தால் மட்டுமே ரயில்வே பிளாட்பார்ம் செல்ல அனுமதி என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 15 அன்று மகா கும்ப யாத்திரைக்காக பிரயாக்ராஜ் செல்ல முண்டியடித்த பயணிகள் கூட்டத்தினால், புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அச்சம்பவம் நடைப்பெற்று முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதக்காலம் ஆன நிலையில், நேற்று ரயில்வேத் துறையின் உயர் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

கன்பார்ம் டிக்கெட் இருந்தால் தான் அனுமதி:

இந்தக் கூட்டத்தில், ரயில் நிலையங்களில் அகலமான நடைபாதை மேம்பாலம் (FOB) கட்டுமானம், போர் அறைகளை நிறுவுதல் (war room) மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த மேம்பட்ட தகவல் தொடர்பு கருவிகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய நடவடிக்கைகளுக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில்வே நடைமேடைகளில் கூட்ட நெரிசலைத் தடுக்க, பெங்களூரு உட்பட 60 பரபரப்பான நிலையங்களில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் (confirm Ticket) உள்ள பயணிகள் மட்டுமே நடைமேடைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாதவர்கள்(un-reserved) அல்லது காத்திருப்புப் பட்டியல் டிக்கெட் (waiting list) வைத்திருப்பவர்கள் ரயில்வே நிலையத்திற்கு வெளிப்புற பகுதியில் அமைக்கப்பட உள்ள காத்திருப்பு பகுதியில் (waiting room) அமர வைக்கப்படுவார்கள். மேலும் பயணிகள், அந்தந்த ரயில்கள் வரும்போது மட்டுமே நடைமேடைகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல ரயில் நிலையங்களில், நுழைவு பாதையினை தவிர்த்து சில குறுக்கு வழிகளிலும் ரயில் நிலையத்திற்குள் பயணிகள் வருகைத் தருகின்றனர். இதனை முறையாக கண்டறிந்து அனைத்து குறுக்குப்பாதைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

60 ரயில் நிலையங்கள் எது?

பெங்களூரு உட்பட 60 பரபரப்பான ரயில் நிலையங்களில் இந்த முடிவு செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த 60 ரயில் நிலையங்களின் பெயர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டு பண்டிகைக் காலத்தில் புது தில்லி, ஆனந்த் விஹார், வாரணாசி, அயோத்தி மற்றும் பாட்னா ரயில் நிலையங்களில் இந்த திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது எனவும் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more:

தாலி..குங்குமம் இல்ல? அப்புறம் எப்படி கணவர் அன்பா இருப்பாரு? நீதிபதியின் சர்ச்சை கருத்து

சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு: சர்ப்ரைஸ் கொடுத்த L&T சேர்மன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow