K U M U D A M   N E W S

ரயில்வே

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா: திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இன்று, நாளையும் இயக்கம்!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி, பக்தர்கள் வசதிக்காகத் திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே இன்று (அக். 2) மற்றும் நாளையும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பெரம்பூரில் ரயில் கேரேஜில் தீ விபத்து - ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

ஊழியர்களின் துரிதமாக செயலால் பெரும் அசாம்விதம் தவிர்க்கப்பட்டது

சென்ட்ரல் ரயில் நிலையம்: உறங்கும் பயணிகளிடம் செல்போன் திருட்டு வழக்கில் இருவர் கைது!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அயர்ந்து உறங்கும் பயணிகளின் செல்போன்களைத் திருடிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லக்ஷ்மண குமார் மற்றும் மேடவாக்கத்தைச் சேர்ந்த வினோத் ஆகிய இருவரை ரயில்வே போலீசார் கைது செய்து, 10 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர்.

மாமூல் வசூலித்த ரவுடிக்கு இளம்பெண் வைத்த செக்:  கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடித்த காவல்துறை!

நானும் ரவுடியென மிரட்டி மாமூல் கேட்டுத் தொல்லை கொடுத்த இளைஞரை, இளம்பெண் மற்றும் இரண்டு சிறுவர்கள் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை ரயில் தண்டவாளத்தில் வீசித் தற்கொலை என்று நாடகமாடி, பிணத்துடன் செல்ஃபி எடுத்த விவகாரத்தில் காவல்துறையினர் 3 பேரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மெட்ரோ - பறக்கும் ரயிலை இணைக்க மத்திய அரசு ஒப்புதல்..சென்னை மக்களுக்கு புதிய அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் பறக்கும் ரயில் சேவையை இணைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் பெண்ணிடம் கைவரிசை காட்டிய இளைஞர்...ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை

தான் மீன் வியாபாரம் செய்வதாகவும், மனைவியை பிரிந்த தனியாக இருப்பதால் தன்னுடன் வருமாறு பெண்ணிடம் பேச்சு கொடுத்து கைவரிசை கட்டியதாக போலீசில் கூறியுள்ளார்.

ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர்.. ரயில் மீது குதித்த அதிர்ச்சி சம்பவம்

ரம்மி சூதாட்டத்தில் பணம் இழந்த விரக்தியில், மின்சார ரயில் மீது குதித்த ஆந்திர இளைஞர் சேகர் (37) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்டெர்லாக் செய்யப்படாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது விபத்து - ரயில்வே நிர்வாகம்

பள்ளி வேன் மீது, சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் மோதி விபத்துக்குள்ளானதில், 2 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், வேன் ஓட்டுநர் தான் விபத்துக்கு காரணம் என்றும், வேகமாக இயக்கியதாகவும், ரயில்வே தண்டவாளத்திற்குள் நுழைந்ததாகவும் ரயில்வே தரப்பில் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகிவுள்ளது.

மதுபோதையில் கார் ஓட்டிய தலைமைக்காவலர் தீக்குளித்து தற்கொலை!

மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் செந்தில் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், செந்தில் தரமணி ரயில்வே மைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ரயில் நிலையத்தில் 62 கிலோ கஞ்சா பறிமுதல்.. 5 பெண்கள் உட்பட 6 பேர் கைது!

கோவை ரயில் நிலையத்தில், ரயில்வே காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது, 62 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 6 பேர் கைதாகியுள்ளனர்.

கும்பகோணம் ரயில் நிலையம் முற்றிலும் புனரமைப்பு - தென்னக ரயில்வேயின் பொது மேலாளர்  ஆர்.என்.சிங் பேச்சு

கும்பகோணம் ரயில் நிலையம் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் முற்றிலும் புனரமைக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வேயின் பொது மேலாளர்  ஆர்.என்.சிங் இன்று (மார்ச்.21) கும்பகோணத்தில் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தண்டவாளத்தில் கற்கள்.. ரயிலை கவிழ்க சதியா? போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்ட பாறாங்கற்களால் பரபரப்பு

Loco Pilot Exam | திடீரென ரத்தான தேர்வு... வெயில் அடித்தும் அதிர்ச்சியில் உறைந்த தேர்வர்கள்

இன்று நடைபெறவிருந்த லோகோ பைலட்டுக்கான ரயில்வே தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி

கன்பார்ம் டிக்கெட் இருந்தால் தான் இனி ரயில் நிலையத்திற்குள் அனுமதி: ரயில்வே துறை அதிரடி!

பல ரயில் நிலையங்களில், நுழைவு பாதையினை தவிர்த்து சில குறுக்கு வழிகளிலும் ரயில் நிலையத்திற்குள் பயணிகள் வருகைத் தருகின்றனர். இதனை முறையாக கண்டறிந்து அனைத்து குறுக்குப்பாதைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் துணை நடிகையிடம் திருடிய காவலர்... ரயில்வே போலீசார் விசாரனை

ஓடும் ரயிலில்  தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் ஆறு லட்சம் நகைகள் அடங்கிய கைப்பையை திருடிய காவலரை கைது செய்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2,300 குழந்தைகள் மீட்பு... 899 பேர் மீது சந்தேக வழக்கு... ரயில்வே போலீஸின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

ரயில் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இரண்டாயிரத்து 300 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் பயணிகளின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

Railway Tunnel : ரயில்வே சுரங்கப்பாதை பணிகள்.. மக்கள் பயன்பாட்டிற்கு வராததை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

Chromepet Railway Tunnel : குரோம்பேட்டை ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வராததை கண்டித்து குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

பெண் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரயில்வே போலீசார்

வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண் தள்ளிவிடப்பட்ட விவகாரம்

IRCTC Booking: ரயில் டிக்கெட் புக்கிங்... இன்று முதல் புதிய விதிகள்... இனிமேல் 60 நாட்கள் தான்..?

ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை, 120-ல் இருந்து 60 நாட்களாக குறைத்து ஐஆர்சிடிசி அறிவித்திருந்தது. இந்த புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

ஐ.சி.எஃப்-பில் தயாரான வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்... அடேங்கப்பா இவ்வளவு ஸ்பெஷலா?

ஐ.சி.எஃப்-பில் தயாரான வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்... அடேங்கப்பா இவ்வளவு ஸ்பெஷலா?

IRCTC Booking: ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் காலம் திடீரென குறைப்பு... இனி எத்தனை நாட்களில் முன்பதிவு?

IRCTC Ticket Booking Period Days Update News : ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை, 120 நாட்களில் இருந்து குறைத்து ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

Red Alert எச்சரிக்கை; உதவி எண்கள் அறிவிப்பு | Kumudam News 24x7

கனமழை பெய்யும் மாவட்டங்களில் தெற்கு ரயில்வ்பே சார்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-ல் அடிக்கடி ரயில் விபத்து.. நடுங்கும் மக்கள்..என்ன காரணம்..? - அதிர்ச்சி ரிப்போர்ட்

கவரைப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்தாண்டு தொடக்கம் முதல் தற்போது வரை அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் ரயில் விபத்துகள் பயணிகளை கவலையடைய செய்துள்ளது.

#BREAKING: Kavaraipettai Train Accident: கவரைப்பேட்டையில் ரயில்சேவை தொடங்கியது

ரயில் விபத்து ஏற்பட்ட கவரைப்பேட்டை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. விபத்து ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

Train Accident: ரயில் விபத்தில் நடந்தது என்ன? மனித தவறா? தொழில்நுட்ப கோளாறா?

கவரைப்பேட்டை ரயில் விபத்தில் என்ன நடந்தது? மனித தவறா? அல்லது தொழில்நுட்ப கோளாறா? என்பது குறித்து விரிவான அலசல்..