தமிழ்நாடு

Railway Tunnel : ரயில்வே சுரங்கப்பாதை பணிகள்.. மக்கள் பயன்பாட்டிற்கு வராததை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

Chromepet Railway Tunnel : குரோம்பேட்டை ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வராததை கண்டித்து குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

Railway Tunnel : ரயில்வே சுரங்கப்பாதை பணிகள்.. மக்கள் பயன்பாட்டிற்கு வராததை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!
ரயில்வே சுரங்கப்பாதை பணிகள்.. மக்கள் பயன்பாட்டிற்கு வராததை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

Chromepet Railway Tunnel : சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை ரயில்வே சுரங்கப்பாதை அருகில் மண்டலம் இரண்டு மூன்று ஒருங்கிணைந்த 62 குடியிருப்பர் நல சங்கத்தினர் தாம்பரம் மாநகராட்சி அதிகாரி, ரயில்வேத்துறை மேலாளர்,  நாடாளுமன்ற உறுப்பினர்  என பலருக்கும் பலமுறை கடிதம் எழுதியும், இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேறாமல், எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதின் காரணத்தினால் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். 

இந்த ராதா நகர் ரயில்வே சுரங்கப்பாதை 2010 ஆம் ன தொடங்கி 2014 ஆம் ஆண்டு னமுடிக்கப்பட்டது இரு வழி சுரங்கப்பாதையாக ரயில்வே பகுதியில் முடிக்கப்பட்டது சுரங்க பாதையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக படிக்கட்டு அமைப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது அதற்குள்ள பட்ஜெட்டும் அதற்கும் ரூ14.75கோடி அது முடிக்கப்பட்டு இதுவரை 15 ஆண்டுகள் கடந்து சென்றுவிட்டது இந்த 15 ஆண்டுகளும் படிக்கட்டு அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை சுரங்கபாத பணியும் இதுவரை முடிந்த பாடு இல்லை. உலகத்திலேயே ஒரு சுரங்கப்பாதை பணி 15 ஆண்டுகள் முடிவடையாமல் நடந்து கொண்டிருப்பது இந்த சுரங்கப்பாதை பணி மட்டும்தான் ஆக மத்திய அரசாக இருந்தாலும்  மாநில அரசாக இருந்தாலும் இது நல்ல நிர்வாகத்திற்கு அழகு அல்ல என்று குடியிருப்போர் நல சங்கத்தினர் குற்றச்சாட்டு. அதேபோல வைஷ்ணவி கல்லூரி அருகே உள்ள ரயில்வே கேட் இந்த இரண்டு ரயில்வே பாதையை சுமார் மூன்று லட்சம் மக்கள் கடந்து செல்கின்றனர் இந்த கிழக்கு பகுதியில் மேற்கு பகுதி செல்வதற்காக 52 என்ற அரசு பேருந்து ஏங்கப்பட்டிருந்தது அதுவும் இந்த சுரங்கப்பாதை பணியின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது அதை குறித்து பல்வேறுப்பட்ட அதிகாரியிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை.

மூன்று லட்சம் மக்கள் இதில் பயன்பாடுவதை அறிந்து ஆளும் கட்சி சேர்ந்தவர்கள் அவர்களாகவே மக்கள் பணிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும்  ஆக அதை தவிர்த்து இதுபோன்ற யாரையும் குறை சொல்லாமல் மக்கள் குறைகளை எந்த ஒரு சட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் அறவழியில் போராட்டம் நடத்துவதை தடுக்க நினைப்பது மிகவும் வருந்தத்தக்கது எங்களது போராட்டங்களை எங்களுடைய கோரிக்கைகளை பலமுறை பல்வேறு வழிகளில் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் என்னுடைய கோரிக்கைகளை எப்படி எங்களுடைய தேவைகளை எப்படி தெரியப்படுத்த வேண்டும் எனவே நாங்கள் இந்த அறவழியில் போராட்டத்தை தொடங்கி உள்ளோம் இது இத்துடன் முடியாது எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

இந்த சுரங்க பாதையை பணி முடிவடைந்து  படிக்கட்டுகள் அமைக்காமல் தொடங்கப்படும் என்றால் அதே இடத்தில் அமர்ந்து தர்ணா அல்லது உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். எனவே நாங்கள் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் 3 லட்சம் மக்களின் வாழ்வாதாரங்களை காக்க வேண்டும் என்றால் திருவழிப்பாதை சாலையில் அரசு பேருந்து செல்லும் அளவிற்கு சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் எனவும் முயற்சி செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் அவ்வப்போது எங்கள் போராட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்தனர்.