கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே செம்மங்குப்பம் பகுதியில் ரயில் தண்டவாளம் சாலையின் நடுவே அமைந்துள்ளது. அந்த தண்டவாளத்தை கடந்து வாகனங்கள் பயணிப்பது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், இன்று காலை குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் ஒன்று அந்த சாலையில் சென்றுள்ளது. தண்டவாளத்தில் ரயில் வருவதை கவனிக்காமல் பள்ளி வேனின் ஓட்டுனர் வேனை ஓட்டியதாக கூறப்படுகிறது. இதனால், பள்ளிக்குச் சென்ற குழந்தைகளுடன் சென்ற வேன் ரயில் மீது மோதியதில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர் மயிலாடுதுறை பயணிகள் ரயில் காலை 7 மணியளவில் செம்மங்குப்பம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் பாதையில் வாகனங்கள் செல்லும் பாதையும் உள்ளது. அந்த இடத்தில் ரயில் வருவதை அறியாத பள்ளி வேன் ஓட்டுனர், தண்டவாளத்தில் ரயில் வரவில்லை என்று கருதி வேனை இயக்கியுள்ளார். அப்போது, வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதனால், வேன் ரயிலின் வேகத்தில் இடித்து தள்ளப்பட்டு அப்பளம்போல நொறுங்கி தண்டவாளத்தில் இருந்து பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.
கடலூரில் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது, சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் மோதி விபத்துக்குள்ளானதில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் இந்த ரயில் விபத்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேட் கீப்பர் கேட்டை மூடத் தொடங்கிய போது வேன் ஓட்டுநர் வேனை வேகமாக இக்கியதாகவும் , ரயில்வே தண்டவாளத்திற்குள் நுழைந்ததாகவும் ரயில்வே தரப்பில் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ஆளில்லாத ரயில்வே கேட் முறையாக மூடப்படாததால் ரயில்வே வேன் உள்ளே நுழைந்ததாக முதலில் மக்கள் குறிப்பிட்ட நிலையில் ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் இன்டர்லாக் செய்யப்படாத கேட் எனவும், கேட் கீப்பர் முறையாக மேனுவலாக கேட்டை மூட முயற்சித்ததாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், காயமடைந்த மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரயில்வே கேட்கீப்பர் முறையாக கேட்டை மூடாமல் தூங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிய நிலையில், கேட் கீப்பரின் கவனக் குறைவால் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்துக்குக் காரணம் என்பதால், அலட்சியமாக இருந்ததாக கேட் கீப்பரை பொதுமக்கள் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.