தாலி..குங்குமம் இல்ல? அப்புறம் எப்படி கணவர் அன்பா இருப்பாரு? நீதிபதியின் சர்ச்சை கருத்து
நீதிபதிகளின் தவறான கருத்துக்கள் குறித்து புகார்களை எழுப்ப எந்த வழியும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று வழக்கறிஞர் கூறினார்.

குடும்ப வன்முறை தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் தாலி மற்றும் குங்குமம் இடவில்லை என்பதற்காக அவரது திருமண நிலை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பியுள்ள சம்பவம், சமூக வலைத்தளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது.
புனே மாவட்ட நீதிமன்றத்தில் பிரிந்த தம்பதியினருக்கு இடையேயான குடும்ப வன்முறை வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது. அதனை விசாரித்த நீதிபதி கூறிய கருத்து தான் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் அங்கூர் ஆர் ஜஹாகிர்தார், இந்த சம்பவத்தை தனது லிங்க்ட்இன் பதிவில் பகிர்ந்து கொண்டதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கணவருக்கு எப்படி அன்பு காட்ட தோணும்?
ஜஹாகிர்தாரின் கூற்றுப்படி, பிரிந்த தம்பதியினருக்கு இடையேயான குடும்ப வன்முறை வழக்கை நீதிபதி விசாரணை செய்து கொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணை நோக்கி, "நீ மங்களசூத்திரமும் (தாலி), பிந்தியும் (குங்குமமும்) இடவில்லை என்பதை நான் காண்கிறேன். நீ திருமணமான பெண்ணைப் போல நடந்து கொள்ளவில்லை என்றால், உன் கணவர் ஏன் உன் மீது அன்பு காட்ட வேண்டும்?" என்று கேட்டுள்ளார்.
Read more: Kudumbasthan OTT: நமது வீட்டை படம் பிடித்து காட்டிய குடும்பஸ்தன் 5 மொழிகளில் வெளியீடு!
திருமணம் தொடர்பான சர்ச்சை கருத்துகள் நீதிமன்றத்தில் கூறப்படுவது இது முதல் முறையும் அல்ல. கடந்த 2022 ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் ஒரு ஆணுக்கு விவாகரத்து வழங்கிய போது, பிரிந்த மனைவி தாலி அணியாமல் இருப்பது "மிக உயர்ந்த மனக் கொடுமை" என்று தீர்ப்பளித்தது, அப்போது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியது.
பெண் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க வேண்டுமா?
ஜஹாகிர்தாரின் அதே வைரலான பதிவில், இன்னொரு வழக்கின் சம்பவத்தையும் பகிர்ந்துக் கொண்டார். அப்போது நீதிபதி பெண் ஒருவரிடம் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
"ஒரு பெண் நன்றாக சம்பாதிக்கிறாள் என்றால், அவள் எப்போதும் தன்னை விட அதிகமாக சம்பாதிக்கும் ஒரு கணவனைத் தேடுவாள், குறைவாக சம்பாதிக்கும் ஒருவரை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாள். ஆனால், நன்றாக சம்பாதிக்கும் ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அவன் தன் வீட்டில் பாத்திரங்களைக் கழுவும் ஒரு வேலைக்காரியைக் கூட மணக்கலாம். ஆண்கள் எவ்வளவு நெகிழ்வானவர்கள் என்று பாருங்கள். நீங்களும் கொஞ்சம் நெகிழ்வுத்தன்மையைக் காட்ட வேண்டும். அவ்வளவு கண்டிப்புடன் இருக்காதீர்கள்," என்று நீதிபதி கூறியதாக ஜஹாகிர்தார் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் ஜஹாகிர்தார் பதிவின் இறுதியில் தனது விரக்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். நீதிபதிகள் இதுப்போன்று தவறான கருத்துக்கள் தெரிவிக்கும் போது அதுக்குறித்து புகார் எழுப்ப எந்த வழியும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?






