ராகு கேது.. அதிகரிக்கும் விஷக்கடி மரணங்கள்..1 லட்சம் பேர் பாதிப்பு..4500 பேர் மரணம்

Rahu Ketu Peyarchi Palan 2024 : தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் விஷக்கடியால் 1 லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாகவும் இதில் 4544 பேர் உயிரிழப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஷக்கடி மரணங்களுக்கு ஜோதிட ரீதியாக எந்த கிரகம் காரணகர்த்தாவாக இருக்கிறது அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

Jul 13, 2024 - 11:51
Jul 13, 2024 - 13:01
 0
ராகு கேது.. அதிகரிக்கும் விஷக்கடி மரணங்கள்..1 லட்சம் பேர் பாதிப்பு..4500 பேர் மரணம்
Rahu Ketu Peyarchi Palan 2024 Poison Death

Rahu Ketu Peyarchi Palan 2024 : வேத ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகு சஞ்சாரம் சிலரின் நோய்களை தீர்க்கும். சிலருக்கு நாட்பட்ட தீராத நோய்களை உண்டாக்கும். நன்கு உயரமான, மெலிந்த ஒல்லியான உடலமைப்புக்கு காரணமானவர் ராகு பகவான். பேய், பிசாசு, பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றிற்கெல்லாம் பயப்பட செய்வது ராகு தான். விஷப்பூச்சிகள், விஷ வண்டுகள் கடிப்பது, அதனால் உடல் நலக்குறைவு ஏற்படுவது, விஷப் பாம்புகள் கடிப்பதன் மூலம் பெரும் துன்பம் அடைந்து உயிரிழப்பது போன்ற செயல்களும் ராகுவால் தான் நடக்கின்றன.

தமிழ்நாட்டில் பாம்பு, நாய், தேள் ஆகிய உயிரினங்களால் மக்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. விஷக்கடிக்கான மரணங்களை தடுக்கும் வகையில் துணை மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. விஷக்கடிக்கான நச்சு முறிவு மருந்துகளை அனைத்து மருத்துவமனைகளிலும் கையிருப்பில் வைத்துகொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அளித்துள்ள புள்ளி விபரத்தில் கடந்த 2023 ஏப்ரல் முதல் மார்ச் 2024 வரை பாம்பு தேள் நாய் உள்ளிட்ட உயிரினங்களின் விஷக்கடியால் 1,03,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் 4544 பேர் உயிரிழந்துள்ளனர். விஷக்கடியால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்திருந்தாலும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

விஷக்கடி ஏற்படும் பட்சத்தில் மருத்துவமனைகளில் உடனடியாக முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்படுவதால் ரேபிஸ் நோயால் உயிரிழப்பது மற்றும் விஷக்கடியால் உயிர் இழப்பது குறைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. சேலம், கோவை, வேலூர் விருதுநகர், கள்ளக்குறுச்சி, ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் வாழும் மக்களிடையே இத்தகைய உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 

ஆண்டுக்கு சராசரியாக 800 மரணங்கள் பாம்பு கடியாலும், 40 பேர் நாய் கடியாலும் உயிரிழக்க நேரிடுகிறது.சென்னை கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் விஷக்கடி பாதிப்புகள் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு விஷக்கடிக்கான நச்சு முறிவு மருந்துகளை அனைத்து மருத்துவமனைகளிலும் கையிருப்பில் வைத்துகொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் பாம்பு கிரகமான ராகு பகை ராசியான மேஷம், கடகம், சிம்மம் ஆகிய ராசியில் நின்று இருந்தால், மங்கலான பார்வை, என்ன நோய் என்று இனம் காண முடியாத அளவில் நோய்கள் வரக்கூடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். தந்தை வம்ச வழி நோய்கள் வரக்கூடும்.  ராகு தனது பகை கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாயுடன் இணைந்து இருந்தால், ஜாதகருக்கு கண் பார்வை கோளாறு இருக்கலாம். தண்ணீரில் கண்டம் உருவாகலாம். இடி, மின்னல், மின்சாரம் மூலம் பாதிப்பு வரலாம்.

ராகுவானது மாந்திரீகம், தாந்திரீகம், மாய மந்திரங்களால் உண்டாகும் கெடுதல், மருத்துவ பரிசோதனையில் கண்களுக்கு புலப்படாத நோய்களை வெளிக்காட்டி கொடுப்பது, விஷவாயு, ரசாயன வாயு, செப்டிக் டேங்க் வாயு, கிணறு வெட்டும் போது வெளிப்படும் விஷ வாயு மூலம் உண்டாகும் பாதிப்புகளுக்கு காரணகர்த்தாவாகும்.  பட்டாசு போன்ற ஆயுத கிடங்கு, துப்பாக்கி தொழிற்சாலையில் வேலைக்காரணமாக உண்டாகும் விபத்துகள், எதிர்பாராத விதமாக வாந்தி, மயக்கம், மூச்சு விடுதலில் சிரமம் போன்றவைகளுக்கு காரணமாக இருப்பவர் ராகு தான். விஷக்கடி தொந்தரவினால் பாதிக்கப்படுபவர்கள்.. வீட்டில் விஷப்பூச்சி தொந்தரவு உள்ளவர்கள் புற்றுள்ள அம்மன் கோவில்களுக்கு சென்று பாலபிஷேகம் செய்து வணங்க பாதிப்புகள் குறையும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow