சினிமா

Rajini Kamal: இந்தியன் 2 கவலையில் கமல்... அம்பானி வீட்டில் ரஜினி குத்தாட்டம்... ஒருவேள இருக்குமோ?

நேற்று வெளியான இந்தியன் 2 திரைப்படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், ரஜினி குத்தாட்டம் போட்ட வீடியோவுக்கு நெட்டிசன்கள் புதிய விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

Rajini Kamal: இந்தியன் 2 கவலையில் கமல்... அம்பானி வீட்டில் ரஜினி குத்தாட்டம்... ஒருவேள இருக்குமோ?
Rajinikanth Dance in Anant Ambani Wedding

சென்னை: கோலிவுட்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், படங்கள் வெளியாகும் போது இருவருக்கும் இடையே போட்டி மனப்பான்மை வந்துவிடும் என சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர். முன்பெல்லாம் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகி இருதரப்பு ரசிகர்களையும் சூடாக்கிவிடும். 2கே கிட்ஸ்களுக்கு புரியும்படி சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இப்போது விஜய் – அஜித் மாதிரி, 90களில் இருந்து ரஜினியும் கமலும் ராஜநடை போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினி, கமல் என இருவரின் படங்களும் எதிர்பார்த்த வெற்றிப் பெறவில்லை. இந்த சூழலில் தான் லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மூலம் முதலில் கம்பேக் கொடுத்தார் கமல். அதுவும் வெறித்தனமான கம்பேக்காக அமைந்ததுடன், பாக்ஸ் ஆபிஸிலும் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என சைலண்டாக காத்திருந்த சூப்பர் ஸ்டார், நெல்சனின் ஜெயிலர் திரைப்படம் மாஸ் காட்டினார். இந்தப் படமும் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்ததோடு, பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கலெக்ஷன் செய்தது. 

அதேபோல் விக்ரம் வெற்றிக்காக லோகேஷுக்கு சொகுசு காரும், உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் அப்பாச்சி பைக்கும் கிஃப்ட்டாக வழங்கினார் கமல். இங்கே ஜெயிலர் வெற்றிக்கு ரஜினி, அனிருத், நெல்சன் மூவருக்கும் 1.5 கோடி மதிப்பிலான சொகுசு காரை அன்பளிப்பாக வழங்கினார் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன். இதெல்லாம் விக்ரம் வெற்றிக்கு ரஜினியின் பதிலடி என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிப்பட்டன. அதேநேரம் இருவருமே பொது நிகழ்ச்சிகளில் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று வெளியான இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வி அடைந்துவிட்டதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. அதுமட்டும் இல்லாமல் இந்தியன் 2 டிசாஸ்டர் என்ற ஹேஷ்டேக்கும் முதலாவது இடத்தில் உள்ளது. இதனைப் பார்த்து ஷங்கர், கமல் உள்ளிட்ட இந்தியன் 2 படக்குழுவே பயங்கர அப்செட்டில் உள்ளது. ஆனால், ரஜினியோ அம்பானி இல்ல திருமணத்திற்கு சென்ற இடத்தில், குத்தாட்டம் போட்டு அதகளம் செய்துள்ளார். பொதுநிகழ்ச்சிகளில் அமைதியாக சென்றுவிட்டு, அப்படியே திரும்பி வருவது தான் வழக்கம். 

ஆனால், அம்பானி இல்ல திருமணத்தில் வேட்டி, சட்டையுடன் மஜாவாக டான்ஸ் ஆடிய ரஜினி ரசிகர்களுக்கும் செம வைப் கொடுத்துள்ளார். இந்தியன் 2 படத்தின் நெகட்டிவ் ரிசல்ட்டை பார்த்து தான் ரஜினி இந்த ஆட்டம் போட்டாரா என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இது போதாதென்று கமல் இத்தனை கெட்டப் போட்டு நடித்த இந்தியன் 2 தோல்வியடைந்துவிட்டது. ஆனால், ரஜினி ஸ்டைலாக செம மாஸ்ஸாக நடந்து வந்தாலே போதும் என, ஜெயிலர் படத்தின் சில காட்சிகளை ஷேர் செய்து, இந்தியன் 2 படத்தை கலாய்த்து வருகின்றனர்.

அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியில் ரஜினி யதார்த்தமாக டான்ஸ் ஆடியது, கமலின் இந்தியன் 2 தோல்விக்கான கொண்டாட்டமாக மாறிவிட்டது. இதெல்லாம் ரஜினியையும் கமலையும் பிடிக்காதவர்களின் வேலை என அவர்களது ரசிகர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொண்டு வருகின்றனர். முன்னதாக இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளலாம் என சொல்லப்பட்டது. ஆனால், ரஜினியோ அந்த நேரம் பார்த்து இமயலமைக்கு பறந்துவிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.