ஐபிஎல் 2025: சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள பணியாற்றுவேன்.. ரஹானே உறுதி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள அனைவருடனும் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் டி20 தொடரான ஐபிஎல் 18-வது சீசன் மார்ச் 22-ஆம் தேதி தொடங்க உள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 10 அணிகள் மோதும் இத்தொடரின் அட்டவணை சமீபத்தில் வெளியானது. அதன்படி, கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கேப்டனாக ரஹானே நியமனம்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் இந்த அணியை ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக வழிநடத்தி வந்தார். ஆனால், மெகா ஏலத்தில் ஸ்ரேயஸ் ஐயர், பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டு அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து ரஹானே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் அந்த அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஹானே பெருமிதம்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ரஹானே பேசியதாவது, “ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக வலம் வரும் கொல்கத்தா அணியை வழிநடத்த கிடைத்திருக்கும் வாய்ப்பை கெளரவமாக கருதுகிறேன். நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள அனைவருடனும் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மார்ச் 23-ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் தனது முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸுடன் மோதவுள்ளது. இத்தொடருக்கு தயாராகும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்கு முகாம் கடந்த 27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பம் மாதம் நடந்த மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுமார் 9 கோடி ரூபாய் இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






