ரூ.9.5 லட்சம் கோடி கடனில் நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு? ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயில் நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு என முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான 10 ஆண்டுகள் ஆட்சியை வீழ்த்தி கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்தது. 2021-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளான மகளிருக்கு விலையில்லா பேருந்து பயணம், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக செயல்படுத்தி உள்ளது.
ஆளும் கட்சியான திமுக அரசு, ஆட்சி பொறுபேற்று மூன்று முறை முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் திமுக அரசு தனது கடைசி முழுமையான பட்ஜெட்டை மார்ச் மாதம் 14-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மார்ச் 15-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் திமுகவால் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். அதனால், இதுவே திமுகவின் கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும்.
இந்த ஆண்டு தமிழக சட்டசபையில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மற்றும் வாக்காளர்களை கவரும் விதமாக புதிய சலுகைகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்ட அரங்கத்தில் தமிழ்நாடு அரசின் 2025- 26 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பான விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் வல்லுநர்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயில் நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு என ஸ்டாலினை நோக்கி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது.
இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும். கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய காணொளி ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள் அன்று. இன்று மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு மு.க.ஸ்டாலின்?” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது.
இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும்.
கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய… pic.twitter.com/XkVeXJRwEq — K.Annamalai (@annamalai_k) March 3, 2025
What's Your Reaction?






