Mushfiqur Rahman : இரட்டை சதத்தை தவறவிட்ட முஷ்பிகுர் ரஹ்மான்.. பாக். பந்துவீச்சை பிளந்த வங்கதேசம்..

Bangladesh Cricketer Mushfiqur Rahman : பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் அணி 565 ரன்கள் குவித்து அசத்தியது.

Aug 25, 2024 - 14:49
Aug 25, 2024 - 16:18
 0
Mushfiqur Rahman : இரட்டை சதத்தை தவறவிட்ட முஷ்பிகுர் ரஹ்மான்.. பாக். பந்துவீச்சை பிளந்த வங்கதேசம்..
இரட்டை சதத்தை தவறவிட்ட முஷ்பிகுர் ரஹ்மான்

Bangladesh Cricketer Mushfiqur Rahman : பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி, ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி, பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதனால், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

அப்போது, மொஹமது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இன்னும் சிறிது நேரம், பேட்டிங் செய்திருந்தால் இரட்டை சதத்தை அடித்திருப்பார். ஆனால், கேப்டன் ஷான் மசூத் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து, களமிறங்கிய வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 565 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பேட்டிங் செய்த வங்கதேச வீரர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சை லாவகமாக கையாண்டனர்.

இதில், அபாரமாக ஆடிய முஷ்பிகுர் ரஹ்மான், இரட்டை சதம் விளாசுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 191 ரன்கள் எடுத்து குர்ரம் ஷஷாத் பந்தில் அவுட்டானர். இதன் மூலம், வெளிநாடுகளில் அதிக சதங்கள் அடித்த வங்கதேச வீரர்கள் பட்டியலில் தமிம் இக்பாலை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளார். முஷ்பிகுர் ரஹ்மான் 5 சதங்களையும், தமிம் இக்பால் 4 சதங்களையும் அடித்துள்ளார்.

அதேபோல் தொடக்க ஆட்டக்காரர் ஷத்மன் இஸ்லாம் 93 ரன்களில் வெளியேறி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும், ஷாகின் ஷா அஃப்ரிடி, குர்ரம் ஷஷாத், மொஹமது அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 118 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow