பாரிஸ் ஒலிம்பிக் 2024: இந்தியாவின் பதக்கம் மற்றும் தமிழக அணி வீரர்கள் குறித்து ஓர் பார்வை

Tamil Nadu Players in Paris Olympics 2024 : உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் நகரில் நாளை (ஜூலை 26-ம் தேதி) கோலாகலமாக தொடங்குகிறது.

Jul 25, 2024 - 12:48
Jul 26, 2024 - 20:39
 0
பாரிஸ் ஒலிம்பிக் 2024: இந்தியாவின் பதக்கம் மற்றும் தமிழக அணி வீரர்கள் குறித்து ஓர் பார்வை
பாரிஸ் ஒலிம்பிக் 2024-இல் பங்கேற்கும் இந்திய வீரர்கள்

Tamil Nadu Players in Paris Olympics 2024 : இந்த திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக, ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றி குறித்த சிறிய தொகுப்பை பார்க்கலாம்.

பிரிட்டன் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியா 1900ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான் முதன்முதலாக பங்கேற்றது. 26 நாடுகள் பங்கேற்ற அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன. அந்த இரண்டு பதக்கத்தையுமே நார்மன் பிரிட்சர்ட் என்பவரே கைப்பற்றினார். அவர், ஆண்கள் 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்திலும், 200 மீட்டர் தடை தாண்டும் போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றியை பெற்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஆசிய நாடு என்ற வரலாற்றை இந்தியா படைத்தது.

அதற்கடுத்து 1904, 1908 மற்றும் 1912-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா பங்கேற்கவில்லை. 1916-ஆம் ஆண்டு முதலாம் உலகப்போர் காரணமான ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு 1928-ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில், இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வென்றது. இதன் மூலம், தமது முதல் தங்கப்பதக்கத்தை இந்தியா வென்று சாதனை படைத்தது. அதன்பின், 1932, 1936 ஆகிய ஆண்டுகளிலும் இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வென்றது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு 1948ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி ஹாக்கிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது. அதன் பின்னர், 1952, 1956, 1964, 1980 ஆகிய ஆண்டுகளில் இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வென்றது. தனிநபர் பிரிவில் இதுவரை 2 தங்கப்பதங்களை இந்திய அணி பெற்றுள்ளது. 2008ஆம் ஆண்டு அபினவ் பிந்த்ரா துப்பாக்கி சுடுதல் போட்டியிலும், 2020ஆம் ஆண்டு நீரஜ் சோப்ரா ஈட்டு எறிதலிலும் தங்கப்பதக்கம் வென்றனர்.

இதுவரை இந்திய அணி ஒலிம்பிக் போட்டிகளில் 10 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளிப் பதக்கங்கள், 16 வெண்கலப் பதக்கங்கள் என 35 பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில், 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியாவில் இருந்து 117 வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர். 

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தமிழ்நாடு வீரர்கள் பட்டியல்:

1. சுபா வெங்கடேசன் – மகளிர் 400மீ தொடர் ஓட்டம்
2. வித்யா ராமராஜ் – மகளிர் 400மீ தொடர் ஓட்டம்
3. ராஜேஷ் ரமேஷ் – ஆடவர் 400மீ தொடர் ஓட்டம்
4. சந்தோஷ் குமார் தமிழரசன் - ஆடவர் 400மீ தொடர் ஓட்டம்
5. பிரவீன் சித்திரவேல் – மும்முறை தாண்டுதல்
6. ஜெஸ்வின் ஆல்ட்ரின் – நீளம் தாண்டுதல்
7. பிரித்திவிராஜ் தொண்டைமான் – துப்பாக்கிச்சுடுதல் (ஆடவர் ட்ரேப்)
8. ஸ்ரீராம் பாலாஜி – டென்னிஸ் (ஆடவர் இரட்டையர்)
9. சரத் கமல் – டேபிள் டென்னிஸ் (ஆடவர் ஒற்றையர், அணிப்பிரிவு)
10. நேத்ரா குமணன் – பாய்மர படகு 
11. சத்யன் ஞானசேகரன் – டேபிள் டென்னிஸ் (மாற்று வீரர்)

பாரா ஒலிம்பிக் வீரர்கள்:

  1. மாரியப்பன் தங்கவேல் – உயரம் தாண்டுதல்
    2. துளசிமதி முருகேசன் – பேட்மிண்டன் (மகளிர் ஒற்றையர், கலப்பு இரட்டையர்)
    3. மனிஷா ராமதாஸ் – பேட்மிண்டன் (மகளிர் ஒற்றையர்)
    4. நித்ய ஸ்ரீ சுமதி சிவம் – பேட்மிண்டன் (மகளிர் ஒற்றையர், கலப்பு இரட்டையர்)
    5. சிவராஜன் சோலைமலை – பேட்மிண்டன்(ஆடவர் ஒற்றையர், கலப்பு இரட்டையர்) 
    6. கஸ்தூரி ராஜாமணி – பளுதூக்குதல் (மகளிர் 67 கிலோ எடைப்பிரிவு)

    ஒலிம்பிக் வாய்ப்பை தவறவிட்டவர்கள்:

    1. ஆரோக்கிய ராஜ் – ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றும் கடைசி நேரத்தில் காயம் ஏற்பட்டதால் பங்கேற்கமுடியவில்லை.
    2. பவானி தேவி – தகுதிச்சுற்றில் நூழிலையில் தோல்வி, தரவரிசையில் ஒரு இடம் வித்தியாசத்தில் தகுதி பெறமுடியவில்லை.

இது இல்லாமல் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட இளவேனில் வாளரிவன், விஷ்னு சரவணன் ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இளவேனில் வாளரிவன் (குஜராத்) துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும், விஷ்னு சரவணன் (இந்திய கப்பல் படை வீரர்) பாய்மர படகு போட்டியிலும் பங்கேற்க உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow