IPL2025: தோனியுடன் களமிறங்கும் CSK... எந்தெந்த அணியில் ஸ்டார் பிளேயர்ஸ்... ஐபிஎல் Retention அப்டேட்!

2025 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது. இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள வீரர் யார், எந்தெந்த அணிகள் தங்களது நட்சத்திர வீரர்களை தக்க வைத்துள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

Nov 1, 2024 - 13:51
 0
IPL2025: தோனியுடன் களமிறங்கும் CSK... எந்தெந்த அணியில் ஸ்டார் பிளேயர்ஸ்... ஐபிஎல் Retention அப்டேட்!
ஐபிஎல் 2025

சென்னை: 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகம் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை 4 கோடி ரூபாய்க்கு Uncapped Player-ஆக தக்க வைத்துள்ளது. மேலும், ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா 18 கோடிக்கும், பதிரானா 13 கோடிக்கும், சிவம்துபே 12 கோடிக்கும் சிஎஸ்கே அணி தக்கவைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி மீண்டும் விளையாட உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 16 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும், ரோகித் சர்மா 16 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கும், பும்ரா 18 கோடி ரூபாய்க்கும், திலக் வர்மா 8 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர். மும்பை அணியில் ஹர்திக் பாண்டிய கேப்டனாக தொடர்வாரா அல்லது மீண்டும் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பேற்பாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. லக்னோ அணியில் பூரனை 21 கோடி ரூபாய்க்கும், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ் ஆகியோர் தலா 11 கோடி ரூபாய்க்கும், மோசின் கான், ஆயுஷ் படோனி ஆகியோரை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பேட் கம்மின்ஸை 18 கோடி ரூயாய்க்கும், அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோரை 14 கோடி ரூபாய்க்கும், நிதிஷ் ரெட்டியை 6 கோடி ரூபாய்க்கும், தென்னாப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசனை 23 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. இதன் மூலம் இந்த சீசனில் அதிக விலைக்கு தக்க வைக்கப்பட்டுள்ள வீரராக ஹென்ரிச் கிளாசன் காணப்படுகிறார். அதேபோல், குஜராத் டைட்டன்ஸ் அணி ரஷித் கானை 18 கோடி ரூபாய்க்கும், சுப்மன் கில் 16 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும், சாய் சுதர்சனை 8 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும், ராகுல் டெவாட்டியா, தமிழக வீரர் ஷாருக்கானை தலா 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரிங்கு சிங்கை 13 கோடி ரூபாய்க்கும், சக்ரவர்த்தி, சுனில் நரைன், ரஸல் ஆகியோரை 12 கோடி ரூபாய்க்கும், ஹர்சித் ரானா, ராமன்தீப் சிங்கை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் ஆகியோரை 18 கோடி ரூபாய்க்கும், ரியான் பராக், துருவ் ஜுரேல் ஆகியோரை 14 கோடி ரூபாய்க்கும், ஹெட்மையரை 11 கோடி ரூபாய்க்கும், சந்தீப் சர்மாவை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. ஆர்சிபி அணி, விராட் கோலியை 21 கோடி ரூபாய்க்கும், ரஜத் படிதாரை 11 கோடி ரூபாய்க்கும், யாஷ் தயாள் 5 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, அக்சார் பட்டேலை 16 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும், குல்தீப் யாதவ் 13 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும், ஸ்டப்ஸ் 10 கோடி ரூபாய்க்கும், அபிஷேக் பொரேலை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி ஷஷாங்க் சிங்கை 5 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும், பிரப்சிம்ரன் சிங்கை 4 கோடி ரூபாய்க்கும் என 2 வீரர்களை மட்டுமே தக்கவைத்து. நவம்பர் மாதம் நடைபெறும் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிக தொகையுடன் பங்கேற்க உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow