Paris Olympics 2024 : நீரஜ் சோப்ராவுக்கு 2ஆவது தங்கப் பதக்கம்?.. சாதனைப் படைப்பாரா வினேஷ் போகத்?

Vinesh Phogat, Neeraj Chopra in Paris Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக்கில் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில், இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அதேபோல, ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.

Aug 6, 2024 - 22:15
Aug 6, 2024 - 22:37
 0
Paris Olympics 2024 : நீரஜ் சோப்ராவுக்கு 2ஆவது தங்கப் பதக்கம்?.. சாதனைப் படைப்பாரா வினேஷ் போகத்?
வினேஷ் போகத் மற்றும் நீரஜ் சோப்ரா

Vinesh Phogat, Neeraj Chopra in Paris Olympics 2024 : 33-வது ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. சுமார் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் [Manu Bhaker] 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார். மேலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார். அதேபோல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர்களுக்கான போட்டியில், மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு தகுதிச்சுற்று போட்டியில், இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை மூன்றாக உயர்ந்தது.

மல்யுத்தம்:

11ஆவது நாளான இன்று நடைபெற்ற ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் வினேஷ் போகத் [Vinesh Phogat] காலிறுதிக்கு தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில், 50 கிலோ எடைப்பிரிவில், தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஜப்பான் யுயி சுசாகியை 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.

ஒலிம்பிக் பதக்க வரலாற்றில், மல்யுத்தத்தில் இதுவரை இந்தியா  ஏழு (இரண்டு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம்) பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹாக்கிக்கு [12 பதக்கங்கள்] பிறகு இந்திய அதிகப் பதக்கங்களை வென்றது மல்யுத்தத்தில் தான். 

1952ஆம் ஆண்டு இந்திய மல்யுத்த வீரர் கேடி ஜாதவ் முதன்முறையாக வெண்கலப் பதக்கம் வென்றார். அதன் பின்னர், சுஷில் குமார் 2008 ஆண்டும், யோகேஷ்வர் தத் 2012ஆம் ஆண்டும், சாக்‌ஷி மாலிக் 2016ஆம் ஆண்டும், மற்றும் பஜ்ரங் புனியா 2020ஆம் ஆண்டும் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். அதேபோல், சுஷில் குமார் 2012 ஆம் ஆண்டும், ரவி குமார் தஹியா 2020ஆம் ஆண்டும் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர்.

ஈட்டி எறிதல்:

ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் குரூப்-பி பிரிவில் இடம்பிடித்துள்ள நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. நீரஜ் சோப்ரா நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 89.34 மீட்டர் தூரம் எறிந்து தனது தனிப்பட்ட சாதனையையும் படைத்தார்.

நீரஜ் சோப்ரா 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் 87.58 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், தொடர்ந்து இரு தங்கம் வென்ற முதல் இந்தியர், சர்வதேச அளவில் ஐந்தாவது ஈட்டி எறிதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.

ஹாக்கி:

இந்திய அணியும் உலக சாம்பியன் ஜெர்மனியும் இன்று அரையிறுதியில் மோதுகின்றன. இந்திய அணியின் டிஃபெண்டர் அமித் ரோஹிதாஸ் கிரேட் பிரிட்டன் அணிக்கு எதிராக ஃபவுல் செய்து ரெட் கார்டு வாங்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதனால் இன்றைய போட்டியில் அவர் ஆட முடியாததால் 15 வீரர்கள்தான் இந்திய அணிக்காக உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow