படிக்கும் போது பயன்படுத்தும் ரீடிங் கண்ணாடிகளுக்கு இனி விடுதலை.. கண் சொட்டு மருந்துக்கு ஒப்புதல்

இந்தியாவில் கண்ணாடிகளை அகற்ற உதவும் கண் சொட்டு மருந்துகளுக்கு மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. லேசானது முதல் இடைநிலை ப்ரெஸ்பியோபியா உள்ளவர்கள் இந்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்தலாம்.

Sep 4, 2024 - 12:28
 0
படிக்கும் போது பயன்படுத்தும் ரீடிங் கண்ணாடிகளுக்கு இனி விடுதலை.. கண் சொட்டு மருந்துக்கு ஒப்புதல்
presvu eye drops specifically developed to reduce dependency


40 வயதிற்கு மேலானவர்களுக்கு கண் பார்வையில் பிரச்சினை ஏற்படும். புத்தகம், பேப்பர் படிக்க சிரமம் ஏற்படும் போது கண்ணாடி அணியத் தொடங்குவார்கள். வெள்ளெழுத்து பிரச்சினை என்று சொல்வார்கள். அப்போது ரீடிங் கிளாஸ் அணிந்து படிப்பார்கள். வயதுக்கு ஏற்ப, நம் கண்கள் அவற்றின் நெகிழ்ச்சித்தன்மையை இழப்பதன் காரணமாக இது போன்ற கண்ணாடிகள் தேவைப்படுகின்றன. பொதுவாக 40 வயதிற்குப் பிறகு தொடங்கும் ஒரு கண் நோயான ப்ரெஸ்பியோபியாவை பெறும்போது இந்த நிலை நமக்கு ஏற்படுகிறது. 

படிக்கும் போது தூரத்தில் உள்ள பொருள்களின் மீது கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட கூடும், இதற்கு தான் இந்த ரீடிங் கிளாஸ்கள் தேவைப்படுகின்றன. உலகளவில் சுமார் 1.8 பில்லியன் மக்கள் பிரஸ்பியோபியாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் இந்தியாவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட  என்டோட் பார்மாசூட்டிகல்ஸ் பிரஸ்போபியா சிகிச்சைக்காக PresVu கண் சொட்டு மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன.  இது உலக அளவில் 1.09 பில்லியன் முதல் 1.80 பில்லியன் மக்களை பாதிப்பதாக தெரிகிறது.

ப்ரெஸ்பியோபியா என்பது வயதானவுடன் இயற்கையாகவே ஏற்படுகிறது, இது நெருக்கமான பொருள்களில் கவனம் செலுத்துவதில் சிரமத்திற்கு வழிவகுக்கிறது. பொதுவாக 40களின் நடுப்பகுதியில் தொடங்கி 60களின் பிற்பகுதி வரை மோசமாக நிலையை எட்டி விடுகிறது.  மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின்  பொருள் நிபுணர் குழு  முன்னதாக தயாரிப்பைப் பரிந்துரைத்த பிறகு, என்டோட் ஃபார்மாசூட்டிகல்ஸ் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலிடமிருந்து இறுதி ஒப்புதலைப் பெற்றது.

PresVu என்பது 40 வயதிற்கு மேற்பட்டவர்களை பாதிக்கும் பொதுவான வயது தொடர்பான பிரச்சனை தான். பார்வை நிலையான Presbyopia உள்ளவர்களுக்கு படிப்பவர்களின்  கண்ணாடி அதாவது (ரீடிங் கிளாஸ்) தேவையை குறைக்க வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் கண் சொட்டு மருந்து எனக்   கூறப்படுகிறது.
ENTOD பார்மாசூட்டிகல்ஸ் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலிடம் இருந்து இறுதி ஒப்புதலைப் பெற்றது.இந்த தனித்துவமான உருவாக்கம் மற்றும் அதன் உற்பத்தி செயல்முறைக்கான காப்புரிமைக்கு உற்பத்தியாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த கண் சொட்டு மருந்துகள் மேம்பட்ட டைனமிக் பஃபர் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. அவை pH க்கு விரைவாக மாற்றியமைக்க அனுமதிக்கிறது.மேலும் நீண்ட கால பயன்பாட்டிற்கான நிலையான செயல்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த சொட்டு மருந்துகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  

"PresVu இன் அங்கீகாரம் கண் மருத்துவத்தில் ஒரு நம்பிக்கைக்குரிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. ப்ரெஸ்பியோபியா நோயாளிகளுக்கு, இந்த கண் சொட்டு மருந்து ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. இதனால் ரீடிங் கண்ணாடிகளிலிருந்து விடுதலை பெறலாம் என மருத்துவர்  தனஞ்சய் பாக்லே கூறியுள்ளார். இந்த கண் சொட்டு மருந்துகளால்  PresVu ஆனது, 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பொதுவான சவாலாக இருக்கும்,   PresVu ஆனது படிக்கும் கண்ணாடிகளின் தேவையைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் கண் சொட்டு மருந்தாக கூறப்படுகிறது.  

இந்த ஒப்புதலின் முக்கியத்துவத்தை ENTOD பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் CEO நிகில் கே மசுர்கர் எடுத்துரைத்தார்: "PresVu என்பது பல வருட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் விளைவாகும். இது ஒரு தயாரிப்பு மட்டுமல்ல; இது மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு தீர்வாக அமைந்துள்ளது. இந்த கண்சொட்டுமருந்து அக்டோபர் முதல் வாரத்தில், மருந்துச் சீட்டு அடிப்படையிலான கண் சொட்டு மருந்து ரூ.350 விலையில் அருகில் உள்ள மருந்தகங்களில் கிடைக்கும். இந்த மருந்து 40 முதல் 55 வயதுடைய நபர்களுக்கு லேசானது முதல் மிதமான ப்ரெஸ்பியோபியா சிகிச்சைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow