மூதாட்டிக்கு உதவியவருக்கு திருடி பட்டம்...விபரீத முடிவு எடுத்த பெண்...போலீஸ் விசாரணை
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண் எழுதிய பேப்பரை ஆய்வுக்காக அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புளியங்குடி பகுதியில் உதவி செய்த பெண்னை நகை திருடிவிட்டதாக காவல்துறையினர் மற்றும் உறவினர்கள் மிரட்டியதால் மன உளைச்சலுக்கு உள்ளான பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூதாட்டிக்கு உதவி
தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியில் உள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் இசக்கிராஜ் என்பவரது மனைவி ஸ்டெல்லாமேரி (41) பீடி சுற்றும் வேலை செய்து வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் இவரது வீட்டின் அருகில் வயதான மூதாட்டி ராமாத்தாள் என்பவருக்கு மகன்கள் உள்ள நிலையில் இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு உணவுகளை மகன்கள் தினமும் வீட்டில் வைத்து விட்டு சென்று விடுவார்கள். அப்போது மூதாட்டிக்கு தேவையான சிறு, சிறு உதவிகளை பக்கத்து வீட்டை சேர்ந்த ஸ்டெல்லாமேரி செய்து வந்தாக கூறப்படுகிறது.
அந்த வகையில் சம்வத்தன்று மூதாட்டி ராமத்தாள் வீட்டின் முன்பு உள்ள தெருவில் இருந்து கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்போது இதனை பார்த்த ஸ்டெல்லாமேரி மற்றும் அருகில் இருந்தவர்கள் மூதாட்டிக்கு உதவி செய்துள்ளனர்.அதன் பின்னர் சிறிது மயக்கம் தெளிந்த பின்னர் மூதாட்டி ராமத்தாளை அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று உணவு மற்றும் அவருக்கு தேவையான மாத்திரை ஆகியவற்றை கொடுத்துள்ளார் ஸ்டெல்லா மேரி .
Read more: பிரதமரே அதிர வைத்த சம்பவம்: 24 தலித்துகள் சுட்டுக்கொலை.. 44 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தீர்ப்பு
தொடர் மிரட்டல்
அதன் பின்னர் மூதாட்டி ராமத்தாளை அவரது மகன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது மூதாட்டின் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுண் தங்கக்செயின் காணாமல் போய்யுள்ளது. இதனை அடுத்து மூதாட்டியின் மகன் பக்கத்து வீட்டை சேர்ந்த ஸ்டெல்லமேரியிடம் தங்கச்செயினை பற்றி கேட்டுள்ளார். நான் எடுக்கவில்லை என்று ஸ்டெல்லாமேரி கூறியுள்ளார்.
இந்நிலையில் மூதாட்டின் மகன் சீனித்துரை என்பவர் புளியங்குடி காவல் நிலையத்தில் எனது தாயாரின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை ஸ்டெல்லாமேரி திருடிய வைத்துள்ளதாக புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக புளியங்குடி காவல்துறையினர் ஸ்டெல்லாமேரியிடம் விசாரனை என்ற பெயரில் தொடர்ந்து மிரட்டி வந்தாகவும், இதே போன்று மூதாட்டியின் மகன்கள் மற்றும் மருமகளும் சேர்ந்து மூன்று நாட்களாவே மிரட்டி இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
பெண் விபரீத முடிவு
அப்போது ஸ்டெல்லாமேரி கணவரை வேலைக்கு செல்ல கூறி அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் கணவன் சென்றவுடன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து வேலைக்குச் சென்று வீட்டிற்கு வந்த கணவர் இசக்கித்துரை வீட்டை பார்த்தபோது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டியுள்ளது. இதனை அடுத்து அதிர்ச்சிடைந்த கணவர் மற்றும் அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். தொடர்ந்து பேப்பர் மற்றும் சுவற்றில் தனது சாவுக்கு காரணம் சீனிச்சாமி, தங்கதுரை, வளர்மதி, நிர்மலா என மூதாட்டின் மகன்கள், மருகள்கள் நான்கு பெயர்கள் தான் என துண்டு பேப்பர் எழுத்தப்பட்டு அந்த அறையில் கிடந்தது மேலும் அறையின் சுவற்றிலும் எழுதப்பட்டிருந்தது.
இதனை அடுத்து உடனடியாக புளியங்குடி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த அவர் எழுதிய பேப்பரை ஆய்வுக்காக அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் விசாரணை
மேலும் உதவி செய்த பெண்ணை நகையை திருடி விட்டதாக கூறியதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் இதே பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் வீட்டில் 19 லட்சம் பணம் மற்றும் 15 பவுன் நகை திருடு போனது தொடர்பாக இதே புளியங்குடி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினரே புகார் அளித்த விவசாயியே விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததின் காரணமாக மிகுந்த மன உளைசலுக்கு உள்ளான விவசாயி மனமுடைந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறங்கேறியது. தற்போது மீண்டும் இதே பகுதியில் மீண்டும் காவல்துறையினர் விசாரனை என்ற தொடர்ந்து மிரட்டி வந்ததாக பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Read more: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
What's Your Reaction?






