ஜாமினில் வெளிவந்த நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்

நடிகை கஸ்தூரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

Nov 29, 2024 - 00:53
 0
ஜாமினில் வெளிவந்த நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார்

சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி கடந்த நவம்பர் 3-ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்களை பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை கிளம்பியது. தொடர்ந்து, அவருக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. 

இதையடுத்து கஸ்தூரி மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எழும்பூர் காவல் நிலையத்தில்  4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கஸ்தூரி ஜாமீன் பெற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து, போயஸ் கார்டன் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சம்மன் கொடுக்க சென்றபோது வீடு பூட்டியிருந்ததாகவும், அவரது மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, நடிகை கஸ்தூரியின் வீட்டு பணியாளர்களிடம் தனித்தனியாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் ஹைதராபாத்திற்கு அருகே இருப்பது தெரியவந்தது. தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணன் என்பவர் வீட்டில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த எழும்பூர் 14 -ஆவது நீதிமன்ற நீதிபதி தயாளன் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். தினமும் காலை எழும்பூர் காவல் நிலையத்தில் 10 மணியளவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இரு நபர் உத்தரவாதமும் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நடிகை கஸ்தூரி தினமும் எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வரும் நிலையில்  நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow