Agni Brothers Murder : பழிக்கு பழி... திருப்பூரில் நிகழ்ந்தேறிய அக்னி பிரதர்ஸின் நான்காவது கொலை!
Agni Brothers Murder in Palladam : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நண்பனை கொலை செய்ததற்காக பழிக்கு பழி தீர்த்த அக்னி பிரதர்ஸால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Agni Brothers Murder in Palladam : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையான்புதூர் பகுதியில் முகம் சிதைக்கப்பட்டு கை துண்டிக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவரது சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பல்லடம் டிஎஸ்பி விஜிகுமார் தலைமையிலான போலீஸார் குழு, கொலை செய்யப்பட்ட நபர் குறித்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதில் கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் வினோத் கண்ணன் என்பதும் அவர் சிவகங்கை மாவட்டம் உடையன்குளம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் வினோத் கண்ணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மைனர் மணி என்பவரின் கொலை வழக்கில் தொடர்புடைய ஒன்பதாவது குற்றவாளியான அக்னி ராஜ் என்பவரை வினோத் கண்ணன் கும்பல் கொலை செய்தது தெரியவந்தது. அதற்கு பழி தீர்க்கும் வகையில் அக்னி ராஜின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து அக்னி பிரதர்ஸ்(Agni Brothers) என்ற குழுவை உருவாக்கி, அக்னி ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய பரமசிவம், ஆகாஷ், அழகு பாண்டி ஆகிய மூவரையும் தலையை சிதைத்து கொலை செய்துள்ளனர்.
இந்த சூழலில்தான் வினோத் கண்ணன் ஆந்திராவில் தனது குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அக்னி ராஜ் கொலைக்கு(Agni Raj) பழி தீர்க்கும் வண்ணம் அக்னி பிரதர்ஸ் குழுவை சேர்ந்த காளீஸ்வரன், நித்திஷ் குமார் ஆகியோர் வினோத் கண்ணனுக்கு நெருங்கிய நண்பர்களான பல்லடம் பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வரும் பிரபுதேவா மற்றும் சாமிநாதனின் மூலம் ஆந்திராவில் இருந்த வினோத் கண்ணனை பல்லடம் பகுதிக்கு வரவழைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த நிதிஷ்குமார், காளீஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் வினோத் கண்ணனை ஓட ஓட விரட்டி வெட்டி துடிக்கத் துடிக்கக் கொலை செய்துள்ளனர்.
மேலும் படிக்க: 15 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின்படி, தனிப்படை காவல்துறையினர் கோவை, ஈரோடு, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்து சென்று கொலையாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். கொலையாளிகள் பயன்படுத்திய வாகனம் ஒன்று கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகாமையிலேயே நின்றுகொண்டிருந்தது. கொலை நடந்து 2 நாட்கள் கழித்து அதை எடுப்பதற்காக கொலையாளிகளான நிதீஷ் குமார் மற்றும் காளீஸ்வரன் அங்கு வந்துள்ளனர். அப்போது இதுகுறித்த ரகசிய தகவல் கிடைக்கவே அங்கு விரைந்து சென்ற போலீசார், கொலையாளிகளை மடக்கிப்பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தீவிர விசாரணைக்கு பிறகு காளீஸ்வரன், நிதிஷ்குமார் ஆகிய குற்றவாளிகளுடன் சேர்த்து அவர்களுக்குத் தகவல் கொடுத்த சாமிநாதன் மற்றும் பிரபுதேவா ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூன்று பேர் தலைமறைவாக உள்ள நிலையில் போலீசார் அவர்களை நெருங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
What's Your Reaction?