தமிழ்நாடு

பணத்திற்கு பதிலாக வெள்ளைத் தாள்கள்.. நகை வியாபாரியிடம் ரூ.25 லட்சம் மோசடி

வாங்கிய நகைக்கான பணத்திற்கு பதிலாக வெள்ளைத் தாள்களை கொடுத்து மோசடி செய்த நபரை மும்பையில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

பணத்திற்கு பதிலாக வெள்ளைத் தாள்கள்.. நகை வியாபாரியிடம் ரூ.25 லட்சம் மோசடி

சென்னை தண்டையார்பேட்டையில் எல்.எச். எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நகை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தினர் ஹைதராபாத்தில், கடந்த 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்ற நகை கண்காட்சியில் கலந்துகொண்டு நகைகளை பார்வைக்கு வைத்துள்ளனர்.

அப்போது இந்த நகைகளை பார்த்த ஜோத்பூரை சேர்ந்த நகை வியாபாரி ராகேஷ் ஜெயின் என்பவர் குமார் 320 கிராம் எடை கொண்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள செயினை ஆர்டர் செய்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி ராக்கேஷ் ஜெயின் என்பவர் நிறுவனத்தில் தொடர்புகொண்டு, தான் அவசரமாக ஹைதராபாத்திற்கு செல்ல உள்ளதால், நேரில் வந்து நகைகளை பெற முடியாது எனவும் நகைகளை கொடுத்து அனுப்பினால் அதற்குறிய பணத்தை அனுப்பி வைத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அமர்ஜித் ராய் மற்றும் சுதாகர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் நகைகளை கொண்டு வந்து ராகேஷ் ஜெயினிடம் கொடுத்துள்ளனர். பின்னர் நகைக்கு உண்டான பணத்திற்கும் கூடுதலாக, ரூ.32 லட்சம் ரூபாய் 500 தாள்களாக பையில் போட்டு கொடுத்துள்ளார். மீதமுள்ள கூடுதல் பணத்திற்கு, பின்னர் நகைகளை ஆர்டர் செய்து கொள்வதாகவும் ராகேஷ் ஜெயின் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் அலுவலகத்திற்கு பையை எடுத்துச் சென்று பணத்தை சோதனையிட்ட போது அது வெறும் வெள்ளை தாள்கள் என்பது தெரிய வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து ஊழியர்கள் இருவரும் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மும்பையில் பதுங்கி இருந்த கல்லூராம் என்பவரை கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.