பொய் பொய்யாக பேசும் ராகுல்.. இந்துக்களை அவமதிக்க சதி.. மக்களவையில் அனல் பறக்க பேசிய மோடி

டெல்லி: பிரதமர் மோடி மக்களவையில் நேற்று காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு சராமரியாக பதிலடி கொடுத்தார் இந்துக்களை அவமதிக்க நாடாளுமன்றத்தில் சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் பிரதமர் மோடி. ராகுல்காந்தி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதாகவும் கூறிய மோடி சனாதனத்தை டெங்கு, மலேரியாவுடன் சனாதனத்தை ஒப்பிட்ட சிலரை நாடு ஒருபோதும் மன்னிக்காது என்றும் கூறினார்.

Jul 3, 2024 - 06:47
 0
பொய் பொய்யாக பேசும் ராகுல்.. இந்துக்களை அவமதிக்க சதி.. மக்களவையில் அனல் பறக்க பேசிய மோடி

மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய மோடி, எதிர்கட்சியினரின் கூச்சல் குழப்பத்திற்கு இடையே காங்கிரஸ் கட்சியை வெளுத்து வாங்கினார். ராகுல்காந்தி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார். ராகுல்காந்தி கூறிய பொய்கள், காங்கிரஸ் கட்சியை அழித்து விடும். ராகுல்காந்தியின் பொய்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் வலியுறுத்தினார்.

நேருவின் அநியாயத்துக்கு எதிராகத்தான் அம்பேத்கர் தனது பதவியை துறந்தார். தலித்துகளுக்கு காங்கிரஸ் மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது. இந்துக்களை அவமதிக்க நாடாளுமன்றத்தில் சதி நடக்கிறது. இந்துக்கள் அனைவரும் வன்முறையாளர்கள் அல்ல. இந்துக்கள் குறித்து ராகுல்காந்தி பேசியதை மன்னிக்க முடியாது. இந்துக்களை எதிர்ப்பது மட்டுமே காங்கிரஸ் கட்சியின் பணி. இந்துக்களை அவமதிப்பதை ஒரு ஃபேஷனாக காங்கிரஸ் கருதுகிறது. சனாதனத்தை டெங்கு, மலேரியாவுடன் சனாதனத்தை ஒப்பிட்ட சிலரை நாடு ஒருபோதும் மன்னிக்காது என திமுக அமைச்சர் உதயநிதி கருத்தை மறைமுகமாக விமர்சித்து மக்களவையில் பேசினார். 

நீட் தேர்வு குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வினாத்தாள் கசிவு தொடர்பாக புதிய சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது. நீட் தேர்வு குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வினாத்தாள் கசிவு தொடர்பாக புதிய சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது.


நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். காங்கிரசின் சர்வாதிகார மனநிலையால் நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. தலித்துகளுக்கு எதிராக செயல்பட்டதால், நேருவின் அமைச்சரவையில் இருந்து அண்ணல் அம்பேத்கர் விலகினார் எனவும் பிரதமர் புகார் கூறினார். 

போர் விமானங்களை வாங்கியபோது அலட்சியம் செய்து விமர்சித்தது காங்கிரஸ். ஒரே நாடு- ஒரே ஓய்வூதியம் திட்டத்தையும் எதிர்த்ததும் காங்கிரஸ்தான். இந்த தேசத்தின் ராணுவம் பலவீனமடையவே காங்கிரஸ் விரும்புகிறது. ஊழலுக்கு எதிரான சகிப்பின்மை என்கிற எங்கள் கொள்கைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்து வருகின்றனர். 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுத்துள்ளோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow