பாரதியும் திருவள்ளுவரும் பிரதமர் மோடியின் ஃபேவரைட்.. நெகடிவ் கருத்துக்களை மோடி போல டீல் பண்ணுங்க

பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது ஏதாவது ஒரு திருக்குறளையும் பாரதியார் பாடலையும் மேற்கோள் காட்டிப் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவரது பிறந்தநாளில் மோடி கூறிய திருக்குறள் பற்றியும் அவரது கருத்துக்களைப் பற்றியும் பார்க்கலாம்.

Sep 17, 2024 - 15:55
 0
பாரதியும் திருவள்ளுவரும் பிரதமர் மோடியின் ஃபேவரைட்.. நெகடிவ் கருத்துக்களை மோடி போல டீல் பண்ணுங்க
modi birthday

மோடி, தன்னை நோக்கி வரும் விமர்சனங்களை மிகவும் அமைதியாக எதிர்கொள்வார். நம்மை பற்றி யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் நமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அதை எளிதில் எதிர்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பவர் மோடி. தமிழ்நாட்டில் பலருக்கு மோடியை பிடிக்காமல் போனாலும் அவருக்கு தமிழும், திருக்குறளும், பாரதியின் கவிதைகளும், ஔவையாரின் பாடல்களும் பிடித்தமானது. பலமுறை தனது பேச்சில் மேற்கோள் காட்டி பேசுவார் பிரதமர் மோடி. 

மோடி, தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு ஆக்கப்பூர்வமான பதிலடிகளை கொடுப்பார். நம் ஒவ்வொருவருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் உள்ளன. நல்லவற்றில் கவனம் செலுத்த முடிவு செய்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள் என்பார் மோடி.

நல்ல நோக்கத்துடன் கூடிய நல்லாட்சி எங்கள் அரசாங்கத்தின் தனிச்சிறப்பு. நேர்மையுடன் செயல்படுத்துவதே எங்கள் முக்கிய விருப்பம்."
நாங்கள் ஒன்றாக நடக்கிறோம், ஒன்றாக செல்கிறோம், ஒன்றாக சிந்திக்கிறோம், ஒன்றாக தீர்க்கிறோம், ஒன்றாக இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறோம் என்பது மோடியின் தெளிவான கருத்து. 

சமூக ஊடகங்கள் சமூகத் தடைகளைக் குறைக்கின்றன. இது மனித விழுமியங்களின் வலிமையில் மக்களை இணைக்கிறது, அடையாளங்கள் அல்ல.என்னைப் பொறுத்தவரை, எனது மதச்சார்பின்மை, இந்தியாதான் முதலில், நான் சொல்கிறேன், எனது கட்சியின் தத்துவம் 'அனைவருக்கும் நீதி. யாருக்கும் சமாதானம்' என்பதே. இதுதான் நமது மதச்சார்பின்மை என்று கூறியுள்ளார் மோடி.

எந்தவொரு முக்கிய முடிவையும் எடுப்பதற்கு முன்பு ஒருமித்த கருத்தை உருவாக்குவதை நான் எப்போதும் நம்புகிறேன்.நீங்கள் உங்களை தலைவர் என்று அழைத்தால், நீங்கள் தீர்க்கமாக இருக்க வேண்டும், நீங்கள் தீர்க்கமாக இருந்தால், நீங்கள் ஒரு தலைவராக இருக்க வாய்ப்பு உள்ளது. இவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று மோடி கூறியுள்ளார்.

மோடி, தான் கூற வரும் விஷயங்களை தெளிவாக பேசுவார்.திருக்குறலும், பாரதியின் கவிதைகளும் பிரதமர் மோடியின் ஃபேவரைட். தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவார் மோடி.இந்தியாவின் ஜி 20 தலைமையின் கீழ் 4-வது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் கூட்டம்-2023 கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி காணொலி வாயிலாக கூட்டத்தைத் தொடங்கி வைத்து பேசும்போது,திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த திருவள்ளுவர் திருக்குறளில், `நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்' என்று எழுதியுள்ளார். அதாவது தண்ணீரை இழுத்துச் சென்ற மேகம் மழையாகத் திரும்பக் கொடுக்காவிட்டால் கடல்கூட சுருங்கிவிடும் என்று இயற்கையின் மகத்துவத்தைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, "புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

ரேடியோவில் பேசும் போது, நம்முடைய நாட்டின் மொழியின் சிறப்பு குறித்து விளக்குவதற்காக மகாகவி பாரதியின் பாடலை பாடி மேற்கோள் காட்டினார். 
இந்தியாவிற்கு பல்வேறு முகங்கள் இருந்தாலும், அதற்கு உருவம் ஒன்று மட்டுமே என்றும், 18க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தாலும் அதன் எண்ணம் ஒன்று மட்டுமே என்று பாரதி கூறியுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார். 

மேலும் பாரதியின் கவிதையான

''முப்பது கோடி முகமுடையாள்

உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்

இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள் 

எனில் சிந்தனை ஒன்றுடையாள்'' 

என்பதையும் தமிழில் மோடி மேற்கோள் காட்டினார். 

தன்னை பற்றி நெகடிவ் ஆக வரும் விமர்சனங்களை எந்த ஏரியாவில் முன்னேற்ற வேண்டும் என்பதை நோக்கி அவர் அடுத்த அடியை எடுத்து வைப்பார். விமர்சனங்கள் ஒருவரை வளர்த்து விடலாம். இவை பல விஷயங்களை கற்றுக்கொள்வதற்கும் வழிவகுக்கும். இதை பின்பற்றும் மோடி தன்னை இதன் மூலம் முன்னேற்றிக்கொள்கிறார்.

"வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும் குடி உயரக் கோல் உயரும் கோல் உயரக் கோன் உயர்வான்" என்று ஔவையாரின் பாடலை
மேற்கோள் காட்டிய மோடி, எங்கே மக்கள் வறுமையின்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த அரசே சிறப்பான அரசாங்கமாக விளங்கும். அப்படி சிறந்த அரசை ஆளும் மன்னன் மிக உயர்ந்தவனாக போற்றப்பட்டும் மிகுந்த நற்பெயர் பெறுவான் என்று சொன்னார்.

சுயசார்பு திட்டத்தை எடுத்துக் கூற பாரதியாரின் பாடலையும் பிரதமர் மோடி பாடி காண்பித்தார். ஆயுதம் செய்வோம்; நல்ல காகிதம் செய்வோம், ஆலைகள் வைப்போம்; கல்விச் சாலைகள் வைப்போம்" என்றும் "உலக தொழிலனைத்தும் உவந்து செய்வோம்" என்று பாரதியார் பாடலையும் மேற்கோள் காட்டி மோடி பேசியுள்ளார். எந்த சிக்கல், சவால் வந்தாலும் அதை எதிர்த்து போராடும் குணம் படைத்தவர் பிரதமர் மோடி. அதனால்தான் அவர் இந்தியாவின் வலிமையான தலைவராக கொண்டாடப்படுகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow