யூடியூபுக்கு புதிய Rules? influencers மீது பாயப்போகும் நடவடிக்கை? ’இனி இதையெல்லாம் பண்ணகூடாது!
யூடியூபில் influencers எனக் கூறிக்கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கிவரும் யூ டியூபர்கள் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் கூறிய கருத்து என்ன? யூடியூப் கிரியேட்டர்களுக்கு புதிய விதிமுறைகள் வரப்போகிறதா? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

2005ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சமூக வலைதளம் தான் யூடியூப். இதன் பயன்பாடு 2013ம் ஆண்டில் இருந்து அதிகரித்து வந்தது. இதன்பிறகு யூடியூப் இல்லாத செல்போன்களே இல்லை என்ற நிலையில் பெரும் வளர்ச்சியை கண்டது.
இந்த நிலையில், தற்போது யூடியூபை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தாலும், அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக புது புது யூடியூப் கிரியேட்டர்களும் வந்தவண்ணம் உள்ளனர்.
இவ்வளவு ஏன்..ஒரு கட்டத்தில் நாமே “பேசாம ஒரு யூடியூப் சேனல தொடங்கி, நல்லா சம்பாதிக்கலாமா ” என்றெல்லாம் யோசிக்கத்தொடங்கி இருப்போம். இப்படி பட்டித்தொட்டி எங்கும் கொடிகட்டி பறக்கும் யூ டியூப் மூலம் பணம் நிறைய கிடைத்தாலும், இன்னொரு பக்கம் பஞ்சாயத்துகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது.
செய்தி மற்றும் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளிலோ, அச்சு ஊடகங்களிலோ தவறான தகவல் வெளியானால் அவர்களை தண்டிக்கும் சட்டம் இருக்கிறது. ஆனால் சமூக ஊடகமான யூ டியூப்பில் தகவல்களை பகிர போதிய கட்டுப்பாடுகள் இல்லாததால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பிரச்சனைகள் இந்த யூடியூப் மூலம் உருவாகிறது.
கேமரா வசதியுடன் கூடிய ஒரு செல்போன் மற்றும் இணையதள சேவை இருந்தாலே யார் வேண்டுமானாலும் இன்று யூடியூபர் அவதாரம் எடுத்து விடுகிறார்கள்..... அரசியல் தொடங்கி, மருத்துவம், விவசாயம், கல்வி, கலை ஏன் சமையல் டிப்ஸ் வரை யூடியூபர்களின் வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகின்றன. பல நேரங்களில் வீடியோக்களில் இடம்பெறும் தகவலின் உண்மைத்தன்மை அறியாமல் அதனை பலரும் நம்புவதும், அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.
யூடியூப் தளத்தை பொறுத்தவரை, influencerகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனை, #AD போடவில்லை என பிரச்சனை, ஆபாச கண்டெண்டுக்கு 18+ அலர்ட் போடாதது என பல குளறுபடிகள் நடந்துதான் வருகின்றன. சமீபத்தில் கூட India's got latent என்ற ஒரு ஷோவில் கலந்துக்கொண்ட ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசினார் யூடியூபர் ரன்வீர் அல்லபாடியா. இது பெரும் பிரச்சனையாக வெடிக்க அவர் மீது பல வழக்குகள் பதியப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், சமூக வலைதளங்கள் மீதான தமது கவலையை வெளிப்படுத்தி இருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துகள் பகிரப்படுவதை சகித்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் இதனை தடுக்க மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், சந்தோஷம் தான். அப்படி அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கூட, நாங்கள் இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிடப் போவதில்லை என்றும் உச்சநீதிமன்றம் கறாராக கூறியுள்ளது.
ஆன்லைன் கண்டெண்டுகளுக்கான சட்ட வரைமுறையில் இருக்கும் வெற்றிடங்களை யூடியூப் சேனல்கள் மற்றும் யூடியூபர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால், ஆன்லைன் கண்டெண்டுகளுக்கு, புதிய கட்டுபாடுகளும், விதிமுறைகளும் விரைவில் விதிக்கப்படும் என்றே தெரிகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்த்லை தீவிரமாக எடுத்து, மத்திய அரசு எம்மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்கிறது.. இன்னும் எத்தனை influencerகள் இதனால் பிரச்சனையில் சிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
What's Your Reaction?






