கர்நாடக அணைகளில் இருந்து பொங்கி வரும் காவிரி.. வெள்ள அபாய எச்சரிக்கை

Water Released From Karnataka Dams : கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Jul 26, 2024 - 16:21
Jul 27, 2024 - 09:52
 0

Water Released From Karnataka Dams : கனமழையால் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர்,  மாண்டியா மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. அணைகள் நிரம்பி வழிவதால் காவிரியில் 1,17,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகா மாநில அரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கனமழை காரணமாக, கேஆர்எஸ் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது நள்ளிரவு அல்லது நாளை(இன்று) காலைக்குள் ஒன்றரை லட்சம் கனஅடி வரை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. அதேபோல கபினி அணையில் இருந்து 16,900 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 90 அடியாக உயர்ந்தது. அடுத்த சில நாட்களில் 100 அடியை எட்டும் என்பதால் விரைவில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow