"இதற்காக இந்தியா - சீனா உறவு முக்கியம்..” - சீன அதிபர் உடனான சந்திப்புக்கு பிறகு பிரதமர் போட்ட பதிவு
பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு இந்தியா-சீனா இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீன அதிபர் ஜி-ஜின் பிங் சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு இந்தியா-சீனா இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீன அதிபருடனான சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா, பிரேசில், ரஷியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-ஆவது உச்ச மாநாடு ரஷியாவின் கசான் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகமே, போர், மோதல்கள், பொருளாதார நிலையற்றத் தன்மை, வானிலை மாற்றம், பயங்கரவாதம் போன்றவற்றால் சூழப்பட்டிருக்கும் நிலையில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக கூறினார்.
பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுதலுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, மிகவும் கவலைதரும் விஷயமான பயங்கரவாதத்துக்கு எதிராக இரட்டை நிலைப்பாடு என்பதே இருக்க முடியாது என்றார்.
பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி-ஜின்-பிங், போர் நிறுத்தத்திற்கு உலகளாவிய அழுத்தம் தேவை என வலியுறுத்தினார். உலகம் எதிர்பாராத மாற்றங்களைக் கொண்ட புதிய காலகட்டத்தில் நுழைந்துள்ளதாகவும் உலக நாடுகள் பாதுகாவலராக மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து தொடர்ந்து சீன அதிபர் ஜி-ஜின்-பிங் உடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது நமது நாட்டு மக்களுக்கு மட்டும் அல்லாமல், உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா சீனா உறவு முக்கியமானது என்றார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியா - சீனா எல்லையில் 4 ஆண்டுகளாக நிலவிய பிரச்னைக்கு ஏற்பட்ட தீர்வு வரவேற்கத்தக்கது என்றும் எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவது முக்கியமானது எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க: Amaran Trailer: “ஆர்மிதான் என் Life..” சிவகார்த்திகேயனின் ஆக்ஷன் சரவெடி... வெளியானது அமரன் ட்ரெய்லர்
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு இந்தியா-சீனா இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை இருதரப்பு உறவுகளை வழிநடத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?