Chennai Traffic Issue : கார் பந்தயம் முடிந்தும் தீராத தலைவலி.. போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

Chennai Traffic Issue Due To Formula 4 Car Race : சென்னையில் சர்வதேச கார் பந்தயம் முடிந்து 10 நாட்கள் கடந்தும், தடுப்புகளை அகற்றாததால், வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது.

Sep 12, 2024 - 13:45
Sep 12, 2024 - 14:01
 0
Chennai Traffic Issue : கார் பந்தயம் முடிந்தும் தீராத தலைவலி.. போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

Chennai Traffic Issue Due To Formula 4 Car Race : சர்வதேச தரத்தில் சென்னையில் இரவு நேர ஃபார்முலா கார்பந்தையம் தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் நடத்தப்பட்டது. இதற்காக சென்னையில் முக்கிய சாலைகளில் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ரேஸ் ட்ராக் அமைக்கப்பட்டது.

கார் பந்தயம் முடிவடைந்த நிலையில் சாலைகளில் அதற்காக அமைக்கப்பட்ட ரேஸ் ட்ராக் தடுப்புகள் இன்னும் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கார் பந்தயம் முடிந்து பத்து நாட்கள் ஆகிய நிலையில் இன்னும் அதற்கான தடுப்புகள் அப்புறப்படுத்தப்படாமல் சாலைகளிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இரவு நேர கார் பந்தயத்திற்கு பயன்படுத்திய மின்விளக்கு கம்பங்களும், தடுப்புகளுக்காக போடப்பட்ட டையர்கள் ஆகியவை சாலைகளின் ஓரமாக ஆங்காங்கே போடப்பட்டுள்ளது. இதனால் அண்ணா சாலையில் இருந்து சென்ட்ரல் நோக்கி பிராட்வே செல்லக்கூடிய வாகன ஒட்டிகள், அதேபோல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தொடங்கி பல்லவன் சாலை வழியாக செல்லக்கூடிய வாகன் ஓட்டிகள், கார்பந்தியத்திற்க்கு பயன்படுத்திய தடுப்புகள் அகற்றப்படாததால் ஒருவழி சாலையாகவே செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தடுப்புகள் அகற்றப்படாததன் காரணமாக ஒரு வழிச்சாலை குறுகலாக காணப்படுவதால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பல்லவன் சாலை ராஜீவ் காந்தி சாலை தீவுதிடல் பகுதி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள நடைபாதைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளதால் சாலைகளில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது.

இதன் காரணமாக காலை மற்றும் மாலை வேலைகளில் பணிக்கு செல்பவர்கள் மற்றும் பணி முடிந்த வீடு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், ஆங்காங்கே பேரிகார்டுகள் அமைத்து, போக்குவரத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கி உள்ளனர்.

சிங்கப்பூர் போன்ற மேலை நாடுகளில் இது போன்ற கார் பந்தயம் நடத்தப்படுவது வழக்கம் என்றாலும் அப்பந்தயம் நிறைவடைந்த உடன் சாலைகள் உள்ள தடுப்புகள் ஒரு நாட்களுக்குள் முழுவதும் அகற்றப்பட்டு விடும். ஆனால் சர்வதேச தரத்தை மிஞ்சும் அளவிற்கு சென்னையில் கார் பந்தயம் நடத்தி காண்பித்ததாக தமிழ்நாடு அரசு பெருமை கூறினாலும், கார் பந்தயத்திற்காக போடப்பட்ட தடுப்புகளை உடனடியாக அப்புறப்படுத்தாமல் காலம் தாழ்த்துவது, பொதுமக்களிடையே சலிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow