TVK Maanadu: தவெக மாநாட்டில் எதுக்கெல்லாம் தடைன்னு தெரியுமா..? அடேங்கப்பா லிஸ்ட் பெருசா இருக்கே!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், கட்சி தொண்டர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Oct 26, 2024 - 23:28
 0
TVK Maanadu: தவெக மாநாட்டில் எதுக்கெல்லாம் தடைன்னு தெரியுமா..? அடேங்கப்பா லிஸ்ட் பெருசா இருக்கே!
தவெக மாநாட்டில் தடை செய்யப்பட்ட பொருட்களின் லிஸ்ட்

விழுப்புரம்: விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை (அக்.27) நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறும் இந்த மாநாடு, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க மாநாடு என்பதும் குறிப்பிடத்தக்கது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் விஜய்க்கு, தேர்தலில் வெற்றிப் பெறுவதும் ஆட்சியமைப்பதும் அவ்வளவு எளிதானது கிடையாது என அரசியல் வல்லுநர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தவெக மாநாடு இருக்க வேண்டும் என விஜய் முடிவு செய்துள்ளாராம்.

அதனால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த தேதியில் மாநாடு நடத்த அனுமதி கிடைக்காத போதும், காவல்துறையின் அறிவுறுத்தல்படி அவர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்த பின்னர் புதிய தேதி முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நாளை நடைபெறும் தவெக மாநாட்டில், கட்சி தொண்டர்களால் எந்தவிதமான பிரச்சினைகளோ சிக்கல்களோ வந்துவிடக்கூடாது என்பதில் விஜய் கவனமாக உள்ளார். இதனால் தவெக மாநாடு தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே, தொண்டர்களுக்கு கடிதங்கள் வாயிலாக அன்புக் கட்டளைகள் பிறப்பித்து வருகிறார்.

அதில் முக்கியமானது தொண்டர்கள் யாரும் மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக் கூடாது. சொந்த ஊர்களில் இருந்து மாநாட்டுக்கு வரும் போதும், வாகனங்களில் மது அருந்தக் கூடாது என கண்டிப்பாக கூறிவிட்டார். அதேபோல், இருசக்கர வாகனங்களில் வருவதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநாட்டுத் திடலுக்குள் எந்தெந்த பொருட்களை கொண்டுவரக் கூடாது எனவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 18 பெருட்களுக்கு மாநாட்டுத் திடலுக்கு கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

செல்ஃபி ஸ்டிக், மதுபானங்கள், வீடியோ கேமராக்கள், ஃபிளாஷ் லைட் உள்ள கேமராக்கள், ட்ரோன் போன்ற ரிமோட் உபகரணங்கள், ஸ்கேட்டிங் ஸ்கூட்டர், சைக்கிள்-பைக் உட்பட இருசக்கர வாகனங்கள், பிளே கார்ட்ஸ், மது அருந்த பயன்படுத்தப்படும் கண்ணாடி டம்ளர்கள்-கோப்பைகள், விலங்குகள், சட்டவிரோத பொருட்கள், ரேடியோ தொடர்பு சாதனங்கள், ஆபத்தான பொருட்கள், லேசர் பொருட்கள், ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள், மற்ற கட்சிகளின் கொடிகள் பேனர்கள் ஆகியவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. 

இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் உடனடியாக தவெக மாநாட்டுத் திடலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என சொல்லப்படுகிறது. தவெக மாநாட்டுக்கு சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட அனைத்து வயதுடையவர்களும் பங்கேற்கவுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. மாநாடு நாளை மாலை தொடங்கவுள்ள நிலையில், இப்போதே வெளியூரில் இருந்து ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வி.சாலையில் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow