ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு.. மேயர் பிரியா அளித்த நச் பதில்!
சென்னை மாநகராட்சியில் செயல்படும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு வரும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னையில் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில், பேருந்து சாலைகளில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை நீர் தெளித்து சுத்தம் செய்யும் பணிக்காக கொண்டுவரப்பட்டுள்ள 30 வாகனங்களை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பிரியா தொடங்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “தூய்மை பணிகளுக்காக மாநகராட்சி சார்பில் புது புது முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னையில் சாலைகளில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை நீர் தெளித்து சுத்தம் செய்யும் பணிக்காக 30 வாகனங்கள் தற்போது பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் வரக்கூடிய நாட்களில் புதிதாக 47 வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிகளில் உள்ள பொது கழிப்பிடங்களை சுத்தம் செய்வதில் 400 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக வெளிவந்த தகவல் முற்றிலும் தவறானது. அவ்வாறு எந்தவித முறைகேடும் நடக்கவில்லை.
சென்னையில் உள்ள அனைத்து பொது கழிப்பிடங்களும் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு அவைகளில் சில பொது கழிப்பிடங்கள் தனியாரிடம் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 419 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலியல் சமத்துவம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சியில் செயல்படும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு வரும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. பெண்கள், குழந்தைகள், சிறுமிகள் உள்ளிட்ட பலர் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தமிழக அரசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Read more:-
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு...!
மத்திய அமைச்சர் ப்ளாக்மெயில் செய்வதாக முதலமைச்சர் விமர்சனம்!
What's Your Reaction?






