செங்கல்பட்டுக்கு ஆயிரத்து 285 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிறைவடைந்த திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த அவர், பல்வேறு உதவிகளை பயனாளர்களுக்கு வழங்கினார்.
தேசிய கல்விக்கொள்கை
நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு, நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாட்டின் தனித்துவ கல்வியை ஒழிக்கும் வகையிலும் கல்வியை தனியார் மயமாக்கும் வகையிலும் தேசிய கல்விக்கொள்கை உள்ளதாக குற்றம்சாட்டினார்.
Read More: பாலியல் குற்றத்திற்கு இதுதான் தண்டனை..! ராஜஸ்தான் ஆளுநர் கருத்தால் பரபரப்பு
கல்வியில் இருந்து மாணவர்களை நீக்கம் செய்யும் அத்தனை முயற்சிகளும் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன. சிறுவர்களுக்கு கூட பொதுத்தேர்வு, அனைத்துக்கும் நுழைவுத் தேர்வு என்று எல்லாம் இருக்கிறது.
தமிழ்நாடு
தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ப்ளாக்மெயில் செய்வதாக தெரிவித்தார். இரண்டாயிரம் கோடி இல்லை, பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும், அக்கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்தப் போவதில்லை எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு குறித்து அவதூறாகப் பேசிய அமைச்சரை, அரை மணி நேரத்தில் அவர்தம் கருத்தை திமுக கூட்டணி எம்.பிக்கள் திரும்பப் பெற வைத்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். கலைஞரின் வாரிசுகள் என்பதை திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் நிரூபித்துள்ளனர் என்றும் கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டம் தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்க திமுக ஆட்சியில் பல்வேறு நிறுவனங்கள் அமைத்துள்ளன. மகிந்திரா, விப்ரோ, பிஎம்டபிள்யூ, பாக்ஸ்கான், சாம்சங், இன்போசிஸ் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தமிழ் கலை பெருமை சொல்லும் மாமல்லபுரம் அமைந்துள்ள மாவட்டம் செங்கல்பட்டு என்று கூறினார்.
Read More:'எந்திரன்' திரைப்பட வழக்கு: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை