பாலியல் குற்றத்திற்கு இதுதான் தண்டனை..! ராஜஸ்தான் ஆளுநர் கருத்தால் பரபரப்பு
பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில ஆளுநர் ஹரிபாவ் பாகடே கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தில் நிர்வாகிகள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அம்மாநில ஆளுநர் ஹரிபாவ் பாகடே பேசியதாவது, “மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நகராட்சியில் ஏராளமான நாய்கள் பெருகியதால், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக அவற்றிற்கு ஆண்மை நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுபோன்று, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கும் ஆண்மை நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்களுக்கு உதவ முன்வராமல், அச்சம்பவத்தை வீடியோ எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க: பெண் குழந்தை பெற்றால் ரூ.50,000- ஆண் குழந்தைக்கு பசு மாடு: எம்.பி அதிரடி அறிவிப்பு
இவர்கள் செயலற்று வாழ்வதைப் பார்க்கும்போது, இதுபோன்ற கொடூர குற்றங்களில் ஈடுபட நினைக்கும் மற்றவர்களுக்கும் அச்ச உணவு ஏற்படும். மக்களிடையே மனதளவில் மாற்றம் ஏற்படாதவரை, பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியாது. பாதிக்கப்படும் மக்களுக்கு விரைவான நீதி கிடைப்பது அவசியம். அதற்கு தங்களின் திறன்களை வழக்கறிஞர்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்” என்றார்.
மேலும், பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இதுபோன்ற குற்றவாளிகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அவர்கள் தொடர்ந்து சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்றும் எச்சரித்தார்.
மேலும் படிக்க: குடியரசு துணைத் தலைவரை நேரில் சந்தித்த பிரதமர்.. விஷயம் இதுதான்!
குற்றவாளிக்கு எதிரான கூட்டு நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும் என்பதால் மக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்தியாவில் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள், குழந்தைகள், ஆசிரியர்கள் என அனைவரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்.
இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






