குடியரசு துணைத் தலைவரை நேரில் சந்தித்த பிரதமர்.. விஷயம் இதுதான்!
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்தார்.

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய சிகிச்சை நிபுணர் ராஜீவ் நாராங் சிகிச்சை அளித்தார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கரின் உடல் நலம், மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று (மார்ச் 9) டெல்லி எய்ம்ஸ் மருத்துமனைக்கு சென்று, ஜெகதீப் தன்கரின் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், “எய்ம்ஸ் மருத்துவமனை சென்று குடியரசு துணைத் தலைவரின் நலம் குறித்து கேட்டறிந்தேன். அவர் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: சாம்பியன் டிராபி 2025: இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து
தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று ஜெகதீப் தன்கரின் நலம் குறித்து விசாரித்தார். குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார். இவருக்கு வயது 73 என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர்கள் பதிவு:-
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் உடல்நிலை குறித்த செய்தி கிடைத்தது. அவர் விரையில் குணமடைய இறவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான், “குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக எனக்கு செய்தி கிடைத்தது. அவர் விரைவில் குணமடைந்து முழு ஆற்றலுடன் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க பாபா மகாகாலைப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் மும்பை பயணம்:-
ஜெகதீப் தன்கர் சமீபத்தில் மும்பைக்கு பயணம் மேற்கொண்டு தனியார் கல்லூரியின் ஆண்டு விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையின் போது, பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்பவர்களை விமர்சித்தார்.
What's Your Reaction?






