மாசி மாத அமாவாசை மயான கொள்ளை நிகழ்ச்சி..பக்தர்கள் சாமி தரிசனம்..!
தமிழகத்தில் உள்ள பல்வேறு அங்காளம்மன் கோயில்களில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தகர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசி பெருவிழாவை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து வீதியுலா வந்த அம்மன் மீது சில்லரை காசுகள், நெல் போன்றவை வாரி இறைத்து தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் அருகே குரும்பலூர் பாளையம் கிராமத்தில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான சூரை திருவிழா நடைபெற்றது. காப்பு கட்டுதலுடன் தொடங்கிய திருவிழாவின் 3ம் நாளில் நடைபெற்ற மயான சூரை நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டையில் உள்ள அங்காளம்மன் கோயில்களில் மாசி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. அங்காளம்மன், பெரியாண்டிச்சி, முனியப்பன், கருப்பண்ணன் வேடமணிந்த பக்தர்கள் நடனமாடியபடி ஊர்வலமாக சுடுகாட்டிற்கு சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயான கொள்ளை தேர் திருவிழா நடைபெற்றது. சுவேத நதிக்கரையில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு ரத்த சாதம் படையலிட்டு பக்தர்களுக்கு வழங்கினர். ஊர்வலமாக வந்த பக்தர்கள் ஆடு, கோழிகளை கடித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாலாற்றின் கரையோரத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சியில், அம்மன் சிலை மற்றும் பூங்கரகம் ஊர்வலமாக வந்த அரசுரன் கண் முட்டை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
What's Your Reaction?






