தை மாத பௌர்ணமி: திருவண்ணாமலையில் 10லட்சம் பக்தர்கள் கிரிவலம்..!

தை மாத பௌர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் 14 கிலோ மீட்டர்  தூரம் கிரிவலம் சென்றனர்.

Feb 11, 2025 - 19:37
 0
தை மாத பௌர்ணமி: திருவண்ணாமலையில் 10லட்சம் பக்தர்கள் கிரிவலம்..!
தை மாத பௌர்ணமி: திருவண்ணாமலையில் 10லட்சம் பக்தர்கள் கிரிவலம்..!

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம், அதன்படி தை மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் நடந்து சென்று வழிபட்டு செல்கின்றனர்.

தை மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று இரவு 7.59 மணிக்கு தொடங்கி நாளை புதன்கிழமை இரவு 8.16 மணிக்கு நிறைவடைகிறது, இந்நிலையில் இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல நாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தை மாத பௌர்ணமி முன்னிட்டு அருணாசலேஸ்வரரை தரிசிக்க வந்துள்ள பக்தர்கள் அதிகாலை முதல் ராஜகோபுரம் முன்பு நீண்ட வரிசையில் அண்ணாமலையாரை தரிசிக்க சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பின்னர் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலையம்மனை தரிசனம் செய்து பின்னர் 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலம் நடந்து சென்று வழிபட்டு சென்றனர்.

தை மாத பௌர்ணமி முன்னிட்டு அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையாமனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்து பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சுமார் ஐந்து மணி நேரத்துக்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து முதலில் அண்ணாமலையாரை வழிபட்டு பின்னர் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து திருமஞ்சனம் கோபுரம் வழியாக பக்தர்கள் வெளியே செல்கின்றனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow