பகுத்தறிவுதான் கேள்வி கேட்கும்.. நல்லது கெட்டது தெரிந்து கொள்ளுங்கள்.. அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்

தவறுகள் யார் செய்தாலும் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கை இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மதிப்பெண்கள் வாங்குவது மட்டும் அறிவு கிடையாது நல்லது கெட்டதை புரிந்து கொள்ளும் அறிவே உண்மையான அறிவு.

Sep 6, 2024 - 10:44
Sep 7, 2024 - 10:12
 0
பகுத்தறிவுதான் கேள்வி கேட்கும்.. நல்லது  கெட்டது தெரிந்து கொள்ளுங்கள்.. அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்
anbil mahesh instruction to teacher

சமூகம் விற்பனை பொருளாக நல்லதையும் வைத்திருக்கும் கெட்டதையும் வைத்திருக்கும். நல்லதை தேர்ந்தெடுப்பதில் தான் நமது அறிவு அடங்கி இருக்கின்றது
கேள்வி கேட்கும் வாய்ப்பை இழக்கின்ற போது அது தவறுகளுக்கு வழிவகுக்கும். ஆன்மீக போதனை செய்த மகா விஷ்ணுவின் வீடியோ சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். 

அரசு பள்ளி நிகழ்ச்சியில் பேசிய மகாவிஷ்ணு பாவ, புண்ணியம், முற்பிறவி போன்றவற்றை நியாயப்படுத்தும் வகையில் அவர் பேசினார். அறிவியலுக்கு புறம்பான பல விஷயங்களை போகிற போக்கில் பேசிக் கொண்டே இருந்தார். ஒரு சிலர் கண் இல்லாம பொறக்குறாங்க, வீடில்லாம பொறக்குறாங்க, பல நோய்களோட பொறக்குறாங்க.. இறைவன் கருணையானவர் என்றால் எல்லோரையும் ஒரே மாதிரி படைத்திருக்க வேண்டியது தானே ஏன் படைக்கவில்லை? ஒருத்தன் கோடீஸ்வரனா இருக்கான், ஒருத்தன் ஏழையா இருக்கான்.. ஒருத்தன் இப்படி இருக்கான்.. ஒருத்தன் அப்படி இருக்கான்.. ஒருத்தன் கிரிமினலா இருக்கான் ஒருத்தன் நல்லவனா இருக்கான்.. ஒருத்தன் ஹீரோவா இருக்கான் ஒருத்தன் ஹீரோ மாதிரி இருக்கான். ஏன் இந்த மாற்றங்கள். போன ஜென்மத்தில் நீங்க என்ன செஞ்சீங்களோ அதைப் பொறுத்துதான் இந்த ஜென்மம் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று அவர் பேசியது பள்ளியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

விஷ்ணு பேசிக்கொண்டிருக்கும் போதே பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார். அது இருவருக்கும் இடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளானது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் ஆன்மிக சர்ச்சை தொடர்பான நிகழ்ச்சிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி விளக்கம் அளித்துள்ளார். 

கல்வியே சமத்துவ மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் எனும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார்.கல்விதான் அனைவரையும் ஏற்றத்தாழ்வு இல்லாத பார்க்கக்கூடிய ஒரு நிலையை உண்டாக்கும் என தந்தை பெரியார் கூறினார்.2030ல் 50% தாண்ட வேண்டும் என்கிற உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் சேர வேண்டும் என்பது நம் இந்தியாவின் இலக்கு ஆனால் அதை தமிழகம் ஏற்கனவே அடைந்து விட்டது.

தமிழகத்தில் இனி இது போன்று யாரும் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும், சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியரை தரை குறைவாக விமர்சித்த மகா விஷ்ணு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.கேள்வி கேட்கும் வாய்ப்பை இழக்கின்ற போது அது தவறுகளுக்கு வழிவகுக்கும்.சைதாப்பேட்டையில் மகாவிஷ்ணுவை கேள்வி கேட்ட பார்வையற்ற தமிழாசிரியர் சங்கருக்கு பாராட்டுக்கள்.தமிழ் தான் பகுத்தறிவுக்கு பொருந்தாத கருத்து வந்தபோது கேள்வி கேட்டது எனவே தமிழ் என்றும் நம்மை கைவிடாது.

சமூகம் விற்பனை பொருளாக நல்லதையும் வைத்திருக்கும் கெட்டதையும் வைத்திருக்கும்.ம் நல்லதை தேர்ந்தெடுப்பதில் தான் நமது அறிவு அடங்கி இருக்கின்றது
கேள்வி கேட்கும் வாய்ப்பை இழக்கின்ற போது அது தவறுகளுக்கு வழிவகுக்கும்.சைபேட்டையில் மகாவிஷ்ணுவை கேள்வி கேட்ட பார்வையற்ற தமிழாசிரியர் சங்கருக்கு பாராட்டுக்கள்.தமிழ் தான் பகுத்தறிவுக்கு பொருந்தாத கருத்து வந்தபோது கேள்வி கேட்டது எனவே தமிழ் என்றும் நம்மை கைவிடாது
 
நாம்தான் மூளையை பயன்படுத்தி எது சரி தவறு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.பள்ளிகளுக்கு யார் வருகிறார்கள் பேசுகிறார்கள் என்ற போது உடனடியாக நாம் கேள்வி கேட்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்

பள்ளிகளுக்கு யார் வரவேண்டும் யார் வரக்கூடாது என்கிற அறிவை ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.அப்படி வரக்கூடியவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் நிகழ்ச்சிகளை நடத்தும் போது முன் அனுமதி பெற வேண்டும் என்கின்ற அந்த பொதுவான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.நாம்தான் மூளையை பயன்படுத்தி எது சரி தவறு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.பள்ளிகளுக்கு யார் வருகிறார்கள் பேசுகிறார்கள் என்ற போது உடனடியாக நாம் கேள்வி கேட்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow