மன்னாதர் சுவாமி சமேத பச்சை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்.. பக்தர்கள் சாமி தரிசனம்..!
500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னாதர் சுவாமி சமேத பச்சை அம்மன் திருக்கோவிலில் ஜீரணோதாரண ரஜபந்தன, அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவானது ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவில் நகரம் என அழைக்கக் கூடிய காஞ்சிபுரம் மாநகரில் உள்ள தேனம்பாக்கம் பகுதியில் 500 வருடங்களாக பழமை வாய்ந்த ஸ்ரீ மன்னாதர் சுவாமி சமேத பச்சையம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
இக்கோவிலில் நீண்ட வருட காலமாக புரோணமைக்கப்பட்டு புதிதாக ராஜ கோபுரம், முனீஸ்வரர் சுவாமிகள், பரிவார கோபுரங்கள் கட்டமைக்கப்பட்டதும், இன்று ஜீரணோதாரண ரஜபந்தன, அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவானது ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.
இக்கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 13ம் தேதி அன்று காலை பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்ட வரப்பட்ட புனிதநீரினை கலசம் நிறுத்தி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி இன்று அதிகாலை ஆறாம் கட்ட யாகசாலை பூஜைகளானது சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலையில் பூஜை நடைபெற்ற முடிந்து, புனித நீர் நிரம்பிய திருக்குடமானது யாகசாலையிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க குட புறப்பாடு செய்து ராஜகோபுரம் கோபுரம், சுற்று சன்னதிகளில் உள்ள கோபுரங்களுக்கும் புனிதநீரானது கோபுர கலசம் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தின் போது வானில் வட்டமிட்ட கருடனை கண்டதும் கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷத்தில் எழுப்பியவாறு கருடனை கண்டு வணங்கினர். பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
500 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்த கோவிலுக்கு நீண்ட நாள் பிறகு மகா கும்பாபிஷேகத்தை நடப்பதை காண்பதற்கு உள்ளூர் மக்களின்றி வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கும்பாபிஷேகம் காண்பதற்கு குவிந்தனர். அதிக பொதுமக்கள் குவிந்ததால் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டனர்.
What's Your Reaction?






