திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் நால்வர் வீதியுலா .. பக்தர்கள் சாமி தரிசனம்,.!
திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் நடைப்பெற்று வரும் பங்குனி உத்திரபெருவிழாவில் பக்தோற்சவத்தை ஒட்டி நால்வர் வீதியுலா நடைபெற்றது.

வரலாற்றுசிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தின் முக்கிய விழாவான பங்குனி உத்திரபெருவிழா கடந்த 15.3.25 அன்று கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைப்பெற்று வருகிறது. இவ்விழாவில் 8 ஆம் திருவிழாவாக பக்தோற்சவம் இன்று சிறப்பாக நடைப்பெற்றது.
இதையொட்டி அருள்மிகு வினாயகர்,சுப்ரமணியர்,சண்டிகேஸ்வர்ர் ஆகிய சுவாமிகள் வண்ணமலர்களால் அலங்கப்பட்டன. இதேபோல் சைவசமய நாயன்மார்களில் முதன்மையானவர்களான சுந்தரர், சம்பந்தர்,அப்பர்,மாணிக்கவாசகர.,மற்றும் அதிகாரந்ந்திகேஸ்வர்ர் ஆகியசுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைப்பெற்றது.
தொடர்ந்து நால்வர்மற்றும் அதிகாரந்ந்திகேஸ்வர்ர் ஆகியசுவாமிகளுக்கு யாகசாலையில் தீபாரதனைநடைப்பெற்றது. தொடர்ந்து வினாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வர்ர் ஆகிய சுவாமிகள் யாகசாலை எழுந்தருளி தீபாரதனை முடித்துக்கொண்டு நால்வருடன் தேவார இசையுடன்,அடியார்கள் புடைசூழ ஆலயத்தில் இருந்து புறப்பட்டு நடவாகனதெரு,சன்னதிதெருவழயாக வந்து தேரடி அருகே கோடி தீபாரதனை நடைப்பெற்று நான்கு ராஜ வீதிகளிலும் வீதியுலா வந்தது. இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு வழிப்பட்டனர்.
What's Your Reaction?






