தொகுதி மறுவரையறை: தமிழகத்தில் தொகுதிகள் குறைந்தால் போராடுவோம் - ஜான் பாண்டியன்
தொகுதி வரையறு காரணமாக தமிழகத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்தால் எதிர்த்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போராடும் என்று தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற புஷ்ப பல்லக்கு விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பின் செய்தியாளரை சந்தித்த ஜான்பாண்டியன், தொகுதி வரையறு காரணமாக தொகுதி எண்ணிக்கை குறையாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார், அதையும் மீறி தொகுதி வரையறையின் போது தொகுதி எண்ணிக்கை குறைந்தால் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கண்டிப்பாக எதிர்க்கும் என்று தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, காவல்துறை சரியாக செயல்படவில்லை, உளவுத்துறை சரியாக கண்காணிக்கவில்லை என்பதன் காரணமாக கொலைகள் அதிகரித்து வருகிறது, காவலர்கள் இரும்பு கரம் கொண்டு அடக்கினால் கூட கொலைகள் அதிகரித்து வருகிறது இனிவரும் காலங்களில் தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் கூறினார்.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டார்கள் ஆனால் அவர்களை நாம் வரவேற்கிறோம் இதுதான் அரசியல், இதற்கு முதலமைச்சர் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறிய அவர், தேர்தல் நெருங்கும் நேரத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான்பாண்டியன் காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
What's Your Reaction?






