மூன்றாம் உலகப்போர் மூளுமா?.. எச்சரிக்கும் ட்ரம்ப்.. உற்று நோக்கும் உலகநாடுகள்

நமக்கு 3ஆம் உலகப்போர் வேண்டாம் என ட்ரம்ப் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் உலகப்போர் பற்றி அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிலும் வேட்பாளர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன.

Aug 31, 2024 - 12:28
 0
மூன்றாம் உலகப்போர் மூளுமா?.. எச்சரிக்கும் ட்ரம்ப்.. உற்று நோக்கும் உலகநாடுகள்
donald trump

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் பிரசாரம் அனல் பறக்கிறது. முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆளும்த ஜனநாயகக் கட்சி வேட்பாளரை கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்து வருகிறார். கமலா ஹாரிஸ் தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் கட்சி தோழர்களுடன் டூர் சென்று கொண்டிருக்கிறார். இது 3ஆம் உலகப்போருக்கு வழி வகுக்கும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.  இந்தப் பதிவு மற்ற உலகநாடுகளை டிரம்ப் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் களமிறங்கியுள்ளார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்பு அவர் போட்டியில் இருந்து பின்வாங்கினார். 

அத்துடன் அவர் புதிய அதிபர் வேட்பாளராக தற்போது துணை அதிபராக இருக்கும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸை முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து ஜனநாயக கட்சி நிர்வாகிகள் விருப்பப்படி 59 வயதான கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.  கமலா ஹாரிஸும், டொனால்ட் டிரம்ப்பும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 4ம் தேதி முதல் நேரடி விவாதத்தில் பங்கேற்க உள்ளனர். 

டிரம்பை கடுமையாக குற்றம்சாட்டி வரும் கமலா ஹாரிஸ், ''அமெரிக்கா மற்றும் அமெரிக்க மக்களின் தன்மையையும் வலிமையையும் குறைக்கும் செயலை நோக்கி டிரம்ப் செல்கிறார். உண்மையில் நமது தேசத்தை பிரிக்கிறார். ஆனால் அமெரிக்க மக்கள் டிரம்புக்கு எதிராக திரும்பி ஒரு புதிய பாதையை தேர்ந்தெடுக்க உள்ளனர். நாங்கள் வெற்றி பெற்றால்  குடியரசு கட்சியை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படும்'' என்றார்.

தற்போதைய கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் சற்று முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ‘மூன்றாம் உலகப்போரை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது’ என ட்ரம்ப் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை நேற்று பதிவிட்டிருந்தார். 

ட்ரம்ப் தனது பதிவில், “அமெரிக்காவுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்துவது யார்? எல்லா இடங்களிலும் குண்டுகள் வீசப்படுகின்றன. உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், ஜோ பைடன் கலிபோர்னியா பீச்சில் தூங்கிக் கொண்டு இருக்கிறார். அவரது கட்சியினரால் ஏற்கனவே ஜோ பைடன் புறக்கணிக்கப்பட்டுவிட்டார்.

கமலா ஹாரிஸ் தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் கட்சி தோழர்களுடன் டூர் சென்று கொண்டிருக்கிறார். இது 3-ஆம் உலகப்போருக்கு வழி வகுக்கும். நமக்கு 3-ஆம் உலகப்போர் வேண்டாம்”, என ட்ரம்ப் பதிவில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு மற்ற உலகநாடுகளை டிரம்ப்பை உற்று நோக்கச் செய்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow