கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை.. சிவராமனுக்கு குற்ற உணர்வு..மரணத்தில் சந்தேகமில்லை - சீமான்

கிருஷ்ணகிரியில் நடந்த முன்னாள் நாம் தமிழர் கட்சியை நிர்வாகி சிவராமன் மரணத்தில் எங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை அவர் தவறு செய்திருக்கிறார் குற்ற உணர்ச்சியால் தான் அவர் இறந்தார் என்று சீமான் கூறியுள்ளார்.

Aug 23, 2024 - 18:13
Aug 24, 2024 - 10:02
 0
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை.. சிவராமனுக்கு குற்ற உணர்வு..மரணத்தில் சந்தேகமில்லை - சீமான்
seeman

சிவராமன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்ட நிலையில், “இதன் பின்னணியில் வேறு யாரோ இருக்கிறார்கள் என்ற சந்தேகமும் எனக்கு இல்லை. குற்ற உணர்ச்சி இருந்ததால்தான் தற்கொலை செய்துள்ளார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

கிகருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் உள்ளிட்ட 9 பேர் அதிரடியாக போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன், பாலியல் வழக்கில் தேடப்பட்டதால் அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.

பள்ளியில் படித்த காலத்தில் என்.சி.சி. மாணவராக இருந்தபோது கிடைத்த அனுபவத்தை பயன்படுத்தி, தனியார் பள்ளி, கல்லூரிகளில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்துள்ளார் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன்.இந்த விவகாரம் குறித்து தாமாக முன் வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், வழக்கில் நேர்மையாக விசாரணை நடத்தவும், இதுவரை காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து 3 நாளில் விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார் சிவராமன் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூறியுள்ளனர். 

இந்த நிலையில் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் நாம் தமிழர் கட்சியின் மருத்துவம் மற்றும் மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அப்போது பெண்கள் மீதான பாலியல் வன்கொடுக்கு எதிராக கோஷமிட்டு கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமனின் மரணம் தற்கொலை தான் என்றும், அதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் கூறினார். சிவராமன் தனக்கு எழுதிய கடிதத்தில், தான் சாகப்போவதாக கூறினார் என்றும், தற்போது குற்ற உணர்வல் தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் இந்த வழக்கு பதியப்பட்டதையடுத்து, சிவராமனை காவல்துறையில் பிடித்துக்கொடுத்ததே நாம் தமிழர் கட்சியினர் தான் எனவும் விளக்கமளித்தார். தொடர்ந்து பேசிய அவர், சமூகத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலைக்கு மரண தண்டனையே தீர்வாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow