பாலியல் தொழிலுக்கு பாதுகாப்பு கேட்ட வக்கீல்.. அதிர்ச்சி அடைந்த நீதிபதி அபராதம் விதிப்பு
இது குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி உத்தரவுக்காக வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.
வழக்கறிஞர் தொழில் உன்னதமான தொழிலாக நம்பப்படுகிறது. ஆனால் இந்த வழக்கறிஞர் பாலியல் தொழில் செய்யவும் அதற்கு பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்துள்ளது வேதனை அளிக்கிறது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வழக்குறைஞர் ராஜா முருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், "நான் நாகர்கோவில் பகுதியில் "friends for ever Trust" என்ற மனமகிழ் மன்றம் நடத்தி பாலியல் சேவைகளை வழங்கி வருகிறேன்.
காவல்துறையினர் என் மீது பொய் வழக்கு பதிவு செய்து தொல்லை செய்து வருகின்றனர். இதனால் எனது தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே காவல்துறையினரின் தொந்தரவில் இருந்து பாதுகாப்பு வழங்குவது மட்டுமல்லாமல் இழப்பீடாக 5 லட்ச ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை நீ போது அதிர்ச்சி அடைந்த நீதிபதி ஒரு வழக்கறிஞர் பாலியல் தொழில் செய்வதற்கு நீதிமன்றத்தை அணுகி உள்ளார். இது மிகுந்த வேதனையும், ஆச்சரியம் அளிக்கின்றது எனவே வழக்கறிஞர் கல்வி தகுதி குறித்து ஆராய வேண்டியுள்ளது. இது போன்ற மனுக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி உத்தரவுக்காக வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.
தற்போது நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில். "மனுதாரர் தான் ஒரு வழக்கறிஞர் எனவும் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்வதற்காக போலீசார் சிறுமி ஒருவரை தனது ட்ரஸ்டிற்கு அனுப்பி பொய் புகார் பெற்று தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்டு, தனது மசாஜ் கிளப்பிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனுதாரர் தன்னை வழக்கறிஞராக அடையாளப்படுத்தி, விபச்சார மையம் நடத்த பாதுகாப்பு கோருவது இந்த நீதிமன்றத்திற்கு அதிர்ச்சியை அளிக்கிறது. சிறுமி, 10ஆம் வகுப்பு வரை பயின்றுள்ளார். அவரது வறுமை நிலையை மனுதாரர் பயன்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார்.
வழக்கறிஞர் எனும் பெயரில் ஒருவர் இதுபோன்ற விஷயத்தை செய்தது மிகவும் துரதிஷ்டவசமானது. கன்னியாகுமரி மாவட்டம் 100 சதவிகித எழுத்தறிவு பெற்ற மாவட்டம். ஆனால் சில மோசமான சம்பவங்களில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சமூகத்தில் வழக்கறிஞர்களின் நற்பெயர் குறைந்து வருவதை பார் கவுன்சில் உணரும் தருணம் இது. இனிவரும் காலங்களிலாவது பதிவு செய்யும் நபர்களின் பின்புலத்தையும், தரத்தையும் உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் பதிவு, கல்வி தகுதியை பார் கவுன்சில் உறுதி செய்ய வேண்டும்.
காவல்துறையினர் இவர் மீது பதியபட்ட வழக்கை விரைவாக விசாரணை செய்து, இறுதி அறிக்கையை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் 5 மாதங்களில் விசாரணையை கீழமை நீதிமன்றம் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.
அதோடு, மனுதாரருக்கு பத்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதைத்தும் அதனை நான்கு வாரங்களில் கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை அலுவலரிடம் வழங்கவும் உத்தரவிட்டார்.
What's Your Reaction?