கஞ்சா பயன்பாட்டில் தமிழ்நாடு எத்தனையாவது இடம்! 6,063 வழக்குகள் பதிவு... 3,914 வாகனங்கள் பறிமுதல்
இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை போதைப்பொருள் தொடர்பாக 6,063 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் உபயோகத்திற்கு எதிரான தடுப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டிஜிபி அலுவலகம், “போதைப்பொருள் ஒழிப்பை மிகவும் தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ள தமிழ்நாடு அரசும் காவல்துறையும் போதையில்லா தமிழகத்தை உருவாக்க அன்றாட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடந்த 2022 ஆகஸ்ட் 10ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கூட்டப்பட்ட போதைப்பொருள் தொடர்பான மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளின் முதல் மாநில அளவிலான மாநாடு ஒரு மைல் கல் ஆகும். இத்தகைய சட்டவிரோத மருத்துகளின் உற்பத்தி போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது.
தமிழ்நாடு காவல்துறையின் கடுமையான முயற்சிகளால், மாநிலம் கஞ்சா சாகுபடி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து குறிப்பாக ஆந்திராவில் இருந்து கஞ்சா கொண்டு வரப்படும் பிரச்சினை தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாடு உட்பட பல்வேறு பிராந்திய மற்றும் தேசிய மன்றங்களில் எழுப்பப்பட்டது.
இத்தகைய தொடர் முயற்சியின் விளைவாக, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சிறப்பு அமலாக்கப் பணியகம் (SEB) 2021ஆம் ஆண்டில் ‘ஆபரேஷன் பரிவர்தன்' என்ற சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் 4,000 கோடி சந்தை மதிப்புடைய 6.41610 ஏக்கர் நிலப்பரப்பில் வளர்க்கப்பட்ட கஞ்சா அழிக்கப்பட்டது.
கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் காரணமாக, 2022 ஆம் ஆண்டில் NDPS சட்டத்தின் கீழ் மொத்தம் 10,665 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதன் விளைவாக 19 வெளிநாட்டவர்கள் உட்பட 14,934 குற்றவாளிகளிடம் 28,383 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 63,848 மாத்திரைகள் மற்றும் 98 கி.கி. மற்ற போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது 2020 ஐ விட 6% அதிகமாகும் (15:44 கி.கி) மற்றும் 2021 (20,431 கி.கி) விட 30% அதிகமாகும்.
2023 ஆம் ஆண்டில் 14,770 குற்றவாளிகள் மீது 10,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் 23,384 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. உலர் கஞ்சா, 0.953 கி.கி. ஹெராயின், 39910 மாத்திரைகள் மற்றும் 1239 கி.கி. மற்ற மருந்துகள் கஞ்சா சாக்லேட்டுகள், மெத்தாம்பேட்டமைன், ஆம்பிடமைன் மற்றும் மெத்தகுலோன் போன்றவை நடப்பு ஆண்டில், 2024 ஆகஸ்ட் வரை, 9750 குற்றவாளிகள் மீது 6,063 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் 15,092 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 90,833 மாத்திரைகள். 93 கி.கி. மெத்தகுஜோன் மற்றும் மற்ற மருந்துகள் 228கி.கி. மேலும், போதை மருந்துகளை கண்டறிவதற்காக 36 மோப்ப நாய்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2022 ஆம் ஆண்டில் 645 குற்றவாளிகளும், 2023 இல் 504 குற்றவாளிகளும் மற்றும் 2024 ஆகஸ்ட் வரை 533 குற்றவாளிகளும், 1982ஆம் ஆண்டின் சட்டம் 146ல் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2022ம் ஆண்டில் 1,507 வாகணங்கள் 2023ம் ஆண்டில் 1,404 வாகனங்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் 1,003 வாகனங்கள் உட்பட போதை மற்றும் மனமயக்கும் பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் மூலம் பயனடைந்த கஞ்சா விற்பனை வழக்குகளை தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக நிதி விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் அசையும் அசையா சொத்துக்கள் முடக்கப்படுகின்றன. ஆகஸ்ட் 2022 முதல் ஆகஸ்ட் 2024 வரை போதைப்பொருளுக்கு எதிரான இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து NDPS வழக்குகளில் தொடர்புடைய 77 குற்றவாளிகள் மற்றும் அவர்களின் அசையும் அசையா சொத்துக்கள் மீது நிதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 8849 வங்கிக் கணக்குகளில் 18.03 கோடி முடக்கப்பட்டுள்ளது.
NDPS வழக்குகளில் தொடர்புடைய முந்தைய வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக, 2019 முதல் மொத்தம் 26,025 குற்றவாளிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். சுமார் 12,454 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட 5466 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டு நன்னடத்தை பிணை பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன. பத்திர நிபந்தனைகளை மீறியவற்களில் 464 குற்றவாளிகள் நிர்வாக நடுவர்களால் சிறை காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 2022 முதல் தலைமறைவான குற்றவாளிகளுக்கு எதிராக மொத்தம் 452 பிணையில் வெளிவர முடியாத பிடி வாரண்டுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை திறம்பட பயன்படுத்த கோடி ரூபாய் வழங்கியுள்ளது. கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் பிற பொது இடங்களில் வழக்கமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
2022 ஆம் ஆண்டில் மொத்தம் 43,083 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சுமார் 12 லட்சம் பேர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது கடந்த 2023 ஆம் ஆண்டில், மொத்தம் 1,10,603 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 30 லட்சம் பேர்களிடம் விழிப்புணர்வு எற்படுத்தப்பட்டது. நடப்பு ஆண்டில் 2024 ஜூன் வரை மொத்தம் 23350 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் இதுவரை சுமார் 8.2 லட்சம் பேர்களிடம் விழிப்புணர்வு எற்படுத்தப்பட்டுள்ளது.
Drive Against Drugs (DAD) சிறந்த முயற்சிக்காக தமிழ்நாடு அமலாக்கப் பிரிவிற்கு 'ஸ்கோச்" விருது வழங்கப்பட்டது. மேலும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான புதிய முயற்சிகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது. கடந்த 2023 ஏப்ரல் 19 மற்றும் 20 அன்று புது தில்லியில் நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைவர்களின் 1வது தேசிய மாநாட்டின் போது "போதைப்பொருள் எதிர்ப்பு பணிக்குழு ANTES இந்த முன்முயற்சிகள் தேசிய அளவில் சிறந்த நடைமுறைகள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அமலாக்கப்பிரிவு தலைமையகத்தில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா உதவி தொலைபேசி எண்: 10561 ஐ அரசு வழங்கியுள்ளது. இந்த கட்டணமில்லா உதவி தொலைபேசி எண் வழங்கப்பட்டதன் நோக்கமானது மதுவிலக்கு குற்றங்கள் கள்ளச்சாராயம், எரிசாராயம் (ஸ்பிரிட்) அகியவற்றை கடத்தல், சட்டவிரோத மது விற்பனை. சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை போன்றவற்றைப் பற்றி தகவல் அளிப்பவர்களும் பொதுமக்களும் இலவசமாகத் தகவல்களைத் தெரிவிக்க உதவுகிறது.
மத்திய புலணாய்வு பிரிவு கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் கட்டணமில்லா தொலைபேசி இயக்கப்படுகிறது. 01.04.2023 முதல் 31.03.2024 வரை மொத்தம் 2,797 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 1,058 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 01.04.2024 முதல் 31.08.2024 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 1,633 அழைப்புகள் பெறப்பட்டன. அதில் 365 அழைப்புகள் ஆதாரம் அற்றவை. அவை தவிர மீதமுள்ள அழைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 768 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமீபகாலமாக தமிழகத்தில் போதைப்பொருள் பரவலாக இருப்பதாக சில குற்றச்சாட்டுகள் எழந்துள்ளன. ஆனால் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் போதைப்பொருள் பரவல் குறைவாக உள்ள பாதுகாப்பான மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்பதையே காட்டுகிறது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போதைப்பொருள் பயன்பாட்டு மற்றும் பரவல் குறித்து Magnitude of substance Use of India இந்திய அரசாங்கத்தால் முறையான. அறிவியல் ஆய்வு நடத்தப்பட்டது. கஞ்சாவின் பயன்பாடு தமிழ்நாட்டில் 0.1% (35 வது இடம்) (10 முதல் 75 வயது வரை) தேசிய சராசரியான 12% 28 விட மிகக் குறைவு. தமிழ்நாட்டில் ஓபியம் பயன்பாடு 0.28% (35 வது இடம்) இது தேசிய சராசரியான 206% ஐ விட மிகக் குறைவு. தமிழ்நாட்டில் மணமயக்க மருந்துகளின் பயன்பாடு 0.3% (33 வது இடம்) இது தேசிய சராசரியான 1.08% ஐ விட மிகக் குறைவு. தமிழ்நாட்டில் உள்ளிழுப்பு வஸ்த்துகள் பயன்பாடு 0.2% (28வது இடம் தேசிய சராசரி 0.7% ஆகும்.
தமிழ்நாட்டின் 50% மக்கள்தொகை கொண்ட வடகிழக்கு (அஸ்ஸாம்) மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறிய மாநிலம் கூட கஞ்சா பயன்பாட்டில் 227% (14வது இடம்! ஓபியம் பயன்பாடு 291% (16வது இடம்) 0.82 பேர் கொண்ட மயக்க மருந்துகளைப் பயன்படுத்துவதில் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் போதைப் பொருள்களின் பரவல் மிகவும் குறைவாக உள்ளது என்பதை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளது.
What's Your Reaction?