Jammu Election: ஜம்மு காஷ்மீரில் காங்., வெற்றி முகம்... ஹரியானாவில் விடாமல் விரட்டிப் பிடிக்கும் பாஜக!

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில், ஹரியானாவில் பாஜக விடாமல் விரட்டிப் பிடித்து வருகிறது.

Oct 8, 2024 - 17:16
Oct 8, 2024 - 20:29
 0
Jammu Election: ஜம்மு காஷ்மீரில் காங்., வெற்றி முகம்... ஹரியானாவில் விடாமல் விரட்டிப் பிடிக்கும் பாஜக!
ஜம்மு காஷ்மீர், ஹரியானா தேர்தல் முடிவுகள்

சென்னை: 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் கடந்த 5ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதேபோல் ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பின்னான முதல் தேர்தல் என்பதால் ஜம்மு காஷ்மீரில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் 46 தொகுதிகளில் வென்றால் ஆட்சி என்ற நிலையில், காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி 47 தொகுதிகளிலும், பாஜக 28 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, இரு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறார். PDP கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தியின் மகள் இல்லிதாக கடும் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் சம்பா, பசோலி தொகுதிகளில் பாஜக வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேசிய மாநாட்டுக் கட்சி குர்ரஸ் தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் தேர்தல் வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர். 

ஹரியானாவை பொறுத்தவரை 49 தொகுதிகளில் பாஜகவும், 35 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியில் முன்னிலை வகித்து வருகின்றன. ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். பாஜக முதலைமைச்சர் முகமான நயாப் சிங் சைனியும், கார்ஹி - சாம்ப்லா தொகுதியில் காங்கிரஸ் முதலமைச்சர் முகமான பூபேந்தர் சிங் ஹூடாவும் முன்னிலை வகிக்கின்றனர். 

முன்னதாக ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்தது. ஒருகட்டத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில், தற்போது பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ், சிபிஎம் அணி 41% வாக்குகளும், பிஜேபி 39% வாக்குகளும் பெற்றுள்ளன. எனவே வாக்குகள் அதிகம் பெற்றாலும், காங்கிரஸ் அணி சற்று பின் தங்குகிறது.  வெற்றியை தீர்மானிப்பதில் மீண்டும் சவுதாலா குடும்பத்துக்கு பங்கு இருக்கும் எனத் தெரிகிறது. துஷ்யந்த் சவுதாலாவுடன் கூட்டணிவ் வைத்து போட்டியிட்ட சந்திரசேகர ஆசாத் கட்சி, பெரியளவில் தாக்கம் எதுவும் ஏற்படுத்தல்லை என சொல்லப்படுகிறது. 

எனவே தற்போதைய நிலவரப்படி ஹரியானாவில் காங்கிரஸ் கூட்டணி கடைசி நேரத்தில் தப்பிப் பிழைக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும் அதன் பின்னர் பல சுவாரஸ்யமான திருப்பங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஹரியானாவில் பாஜக வெற்றிப் பெற்றாலும், ஜம்மு காஷ்மீரில் அக்கட்சியின் தோல்வி இந்திய அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow