வாயால் வந்த வினை... ஜனசேனாவில் இணையும் கஸ்தூரி?
தெலுங்கு மக்களை பற்றி நடிகை கஸ்தூரி பேசுவதையெல்லாம் பேசிவிட்டு, தற்போது மிரண்டு போய் ஜனசேனா கட்சியில் இணைய திட்டமிடுவதாக வெளியான தகவல் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
மாடலிங்..நடிப்பு..50க்கும் மேற்பட்ட படங்கள்.. பிக்பாஸ் எண்ட்ரீ என 1991 முதல் இண்டஸ்ரியில் இருந்து வருபவர் தான் நடிகை கஸ்தூரி.. இவற்றில் எல்லாம் தனக்கு கிடைக்காத பிரபலத்தை தன்னுடைய சர்ச்சை கருத்துகள் மூலம் கஸ்தூரி பெற்றார் என்று சொன்னால் மிகையாகாது. கற்பு பற்றி சர்ச்சைக்குறிய வகையில் பேசியது, நடிகர் சிவகுமாரை கிண்டலடித்தது, தற்போது தெலுங்கு மக்களை தாருமாறாக பேசியது வரை அவர் செய்த சம்பவம் எண்ணிலடங்கா..
கடந்த நவம்பர் 3 ஆம் தேதி அன்று சென்னை எழுப்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் “பிராமணர்கள் பாதுகாப்பு மற்றும் பிரமாணர்களை இழிவுப்படுத்துவோர்மீது நடவடிக்கை எடுக்க தனிச்சட்டம்” ஆகியவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, மன்னர்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்தவர்கள் தான் தெலுங்கு பேசியவர்கள் என்றும், அவர்களெல்லாம் தமிழ் எங்கள் இனம் என்று கூறுவதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அதோடு, தெலுங்கர்கள் 5 பேர் தற்போது அமைச்சர்களாக இருப்பதாகவும் நடிகை கஸ்தூரி தெரிவித்திருந்தார்.
தன்னுடைய இந்த பேச்சால் எதிர்ப்புகள் கிளம்புவதை பார்த்து மிரண்டு போன கஸ்தூரி தான் இப்படி சொல்லவே இல்லை, திமுக தான் வதந்தியை பரப்புகிறது என உடான்ஸ் விட்டார். ஆனால், பலருக்கும் உண்மை நிலவரம் புரிந்து தொடந்து கஸ்தூரியை சமூக வலைதளங்களில் தாக்க, ”பேசாம சரண்டர் ஆகிடலாம்” என முடிவெடுத்து மன்னிப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
பேசுவதை எல்லாம் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டால் விட்டுடுவோமா என்ற கொந்தளிப்புடன், புகார்கள், வழக்குப்பதிவு, மீம்ஸ் என கஸ்தூரிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி வைத்தனர்.
மேலும், நவம்பர் 4ம் தேதி ’நான் ஆந்திர அரசியலில் குதிக்கப்போகிறேன்’ என சொடக்கு போட்டு சொன்னார் கஸ்தூரி. இந்நிலையில், அவர் சொன்னப்படியே பவன்கல்யாணின் ஜனசேனா கட்சியில் அவர் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தான் நடிக்கும் சீரியல் ஒன்றின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெறுவதாகவும், இதனால் தெலுங்கு மக்களின் கோபத்திற்கு ஆளான கஸ்தூரி ஆந்திராவில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற பயத்தில்தான் ஜனசேனா கட்சியில் இணைய இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?