வீட்டிற்கு தெரியாமல் டூர்..பொடிசுகள் போட்ட ப்ளான்...கடைசியில் ”சிக்கிட்டியே செவலை” மொமண்ட்

கோவா, கொடைக்கானல், ஊட்டி...லொகேஷன் எதுவாக இருந்தாலும், பல வருடங்களாக trip ப்ளான் ஒன்று போட்டு கடைசி வரை அதை செயல்படுத்தாமல் இருக்கும் gangகுகளில் நம்மில் பல பேர் ஒரு அங்கமாக இருப்போம். அப்படியொரு காமெடியான உதராணமாக நாம் இருந்துவிடக்கூடாது என நினைத்த இந்த பள்ளிப் பருவ பொடிசுகள் வீட்டிற்கு தெரியாமல் கொடைக்கானலுக்கு சென்ற சம்பவமே இது..

Nov 8, 2024 - 05:30
 0

சென்னை அய்யம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒரே வயதுடைய வெவ்வேறு பள்ளிகளில் படிக்கும் நான்கு சிறுவர்கள் பல நாட்களாக கொடைக்கானல் சுற்றுலா செல்வதற்கு திட்டம் தீட்டி உள்ளனர். இதற்கு பெற்றோர்களின் அனுமதி கிடைக்காது என முடிவெடுத்த அவர்கள், தாங்களாகவே சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதனையடுத்து casualஆக பள்ளிக்குச் சென்றவர்கள் வீடு திரும்பாமல் கொடைக்கானல் செல்ல மதுரைக்கு பஸ் ஏறி உள்ளனர். இந்நிலையில் பள்ளி சென்ற பிள்ளைகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் அவர்களை தேடி அலைந்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டை விட்டு தப்பி வந்த சிறுவர்களில் ஒருவன் வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் இருப்பதாக தனது பெற்றோருக்கு செல்போனில் பேசி உள்ளான். இதனை தொடர்ந்து உடனடியாக அந்தப் பெற்றோர்கள் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமாரை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து விரைந்து செயல்பட்ட எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார்  வத்தலக்குண்டு காவல் நிலையம் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் கொடைக்கானல் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த நான்கு பள்ளி சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இப்போது இருக்கும் பொடிசுகள் எப்படி எல்லாம் நேக்காக செயல்படுகின்றனர் என பல 90ஸ் கிட்ஸ்களை ஷாக்காக வைக்கிறது இச்சம்பவம் ..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow