IPL 2025: எந்த அணிக்கு செல்லப்போகிறார் கே.எல். ராகுல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
2025 ஐபிஎல் தொடருக்கான போட்டிக்கான மெகா ஏலம் இன்று சவுதி அரேபியாவில் இந்திய நேரப்படி 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 367 இந்திய வீரர்களும், 210 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஐபிஎல் ஏலத்தை பொறுத்தவரை கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர், ஜாஸ்பட்லர் ஆகிய வீரர்கள் மீது ஐபிஎல் அணிகளின் கவனம் திரும்பியுள்ளது. இவர்களை எடுப்பதற்கு ஐபிஎல் அணிகளுக்கு கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் ஏலத்தில் இந்திய அணியின நட்சத்திர பேட்ஸ்மேனாக கே.எல். ராகுல். கேப்டன்சி அவருக்கான ஏலத்தொகையில் மிகப்பெரிய ஏற்றத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழும் கே.எல். ராகுல் நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். 32 வயதான அவர் 132 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4,600 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். 2025 சீசனிலும் அவரின் அசாத்திய ஃபார்ம் தொடரும் என்பதால் அவரை ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டி போடுவர்.
கே.எல். ராகுல், முதன் முதலில் 2013 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ரூ.10 லட்சத்திற்கு வாங்கப்பட்டார்.ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளை ராகுல் கேப்டனாக வழிநடத்தி உள்ளார். இதில் 42 போட்டிகளிலல் 20 போட்டிகளில் வெற்றியும், 20 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளார்.
இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டு வரும் கே.எல்.ராகுல், இந்திய அணியை 1 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ளார்
.
ஐபிஎல்லில் அதிக அனுபவத்துடன் நிறைய ரன்களும் குவித்து இருப்பதால், இவர் அதிக தொகைக்கு அணிகளால் ஏலம் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.எல். ராகுல் கடைசியாக 2018 ஏலத்தில் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.
What's Your Reaction?