ஐடி ஊழியர்களுக்கு நற்செய்தி! வேலை வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் முன்னணி நிறுவனங்கள்..
IT Employment 2024 : டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்டவை ஆயிரக்கணக்கான Fresher-களை பணியமர்த்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

IT Employment 2024 : இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்டவை ஆயிரக்கணக்கான Fresher-களை பணியமர்த்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா காலத்திற்கு(Covid Period) பின்பிருந்தே ஐடி உள்ளிட்ட தொழில்துறை நிறுவனங்களின் வருமானம் சரியத் தொடங்கியது. அதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது மிகப்பெரிய அதிர்வலைகளையும் வாழ்வாதாரம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியது. Layoff.ly என்ற தளம் வெளியிட்ட அறிக்கையின்படி 2022ம் ஆண்டை விட 2023ம் ஆண்டில் சுமார் 59% பணி நீக்கங்கள் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்தாண்டு மட்டுமே மொத்தம் 2,62,915 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பொருளாதார வீழ்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிநீக்கம் தீவிரமாக நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, நடப்பாண்டின் முதல் பாதியில் மட்டும் உலகளவில் 98,000க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் வேலை இழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 6 மாதங்களில், உலகளவில் 333 தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா உள்ளிட்டவை அடுத்தடுத்து அதிகளவிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. இந்த ‘mass layoff’ ஐடி ஊழியர்களை மன அழுத்தம் மற்றும் வேலை பாதுகாப்பின்மையில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இப்படியான சூழலில், இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்(TCS), நடப்பாண்டில் சுமார் 40,000 Fresher-களை பணியமர்த்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 5,452 ஊழியர்களை டிசிஎஸ் நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. இது பணியாளர்களை சற்று மன நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் CHRO மிலிண்ட் லக்காட், “டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சியை பெருக்க பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளோம். அதன் ஒரு அங்கமாக திறமைவாய்ந்த இளைஞர்களை பணியமர்த்தி வருகிறோம். திறமை என்று சொன்னாலே அது இந்தியர்கள்தான். எனவே இந்தியர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது” என தெரிவித்துள்ளார். மேலும், “பணியாளர்களின் திறமைக்கேற்ற ஊதியத்தை கொடுக்கத் தயாராக உள்ளோம். 4.5% முதல் 12% வரை ஊதிய உயர்வு வழங்க நிறுவனம் தயாராக இருக்கிறது. உலக அளவில் திறமைகளைக் கண்டறிந்து சரியான வாய்ப்பு வழங்குவதே எங்கள் நோக்கம்” என தெரிவித்துள்ளார்.
இதே போல், இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான Infosys, 2025ம் ஆண்டு சுமார் 20,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. On Campus மற்றும் Off Campus முறையில் பணியாளர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள் எனக்கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து 2025ம் ஆண்டில், HCL டெக் நிறுவனம் 10,000 பேரையும், விப்ரோ நிறுவனம் 10,000 முதல் 20,000 பேரை பணியமர்த்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் வேலையின்மை சதவீதம் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?






