கரூர் கோர்ட்டுக்கு வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் .. அதிமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு
ADMK Ex Minister MR Vijayabaskar in Karur Court : நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் கோரிய நிலையில் கரூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் செய்யப்பட்டார்.
ADMK Ex Minister MR Vijayabaskar in Karur Court : கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்(MR Vijayabaskar) மற்றும் அவரது தம்பி மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின் மீது கரூர் நகர போலீசார்(Karur City Police) புகார் மனு அளித்தார் இந்நிலையில் வாங்கல் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த 1-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கானது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்(MR Vijayabaskar Bail) முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 25ஆம் தேதி ஜாமீன் மீதான வழக்கை தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
இதனால், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானதை அடுத்து, பத்திற்கும் மேற்பட்ட சிபிசிஐடி தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். ஒரு மாத காலமாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் இன்று கைது(MR Vijayabaskar Arrest) செய்யப்பட்டுள்ளார். அவரை சிபிசிஐடி போலீசார் கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியில் வைத்து கைது செய்தனர்.
கடந்த 17ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரை 31ம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார். மேலும், வாங்கல் காவல் நிலையத்தில் ஆறு பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 19ஆம் தேதி அன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் 12 நாள் நீதிமன்ற வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் இது தொடர்பான சிபிசிஐடி மற்றும் வாங்கல் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த இரு வழக்குகளில் இன்று ஜாமீன் கோரிய நிலையில் திருச்சி மத்திய சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 பரத்குமார் முன்னிலையில் ஆஜராகினர். அப்போது, நீதிமன்ற வளாகம் முன்பு அதிமுக தொண்டர்கள் குவிந்ததால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
What's Your Reaction?